Followers

Sunday, August 21, 2011

தமிழர்களின் என்ணறிவு: பில்லியனுக்கும் மேல் தெரியுமா ?



        நம்மில் பலருக்கு கோடி, மில்லியன், பில்லியன் அதற்கு மேல் தெரியாது. ஆனால் 2300 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் அனந்தம்
வரை(10,000,000,00,00,000,00,00,000,00,00,000,00,00,000,00,00,000,00,00,000,00,00,000,00,00,000,00,00,000,00,00,000,00,00,000,00,00,000,00,00,000,00,00,000,00,00,000,00,00,000,00,00,000,00,00,000,00,00,000,00,00,000,00,00,000,00,00,000,00,00,000,00,00,000) அறிந்திருந்தனர். முடிந்தால் அனந்தம் வரை எண்ணிப் பாருங்கள். மூச்சு வாங்குகிறதா.... (ஆமாம். ஒன்றுக்கு பக்கத்தில் 175 சுழியங்கள். )


ஒரு பழங்கணித நூல், ஓலைச்சுவடியிலிருந்து புதிதாக தமிழக அரசால்  முதலில் அச்சில் ஏற்றப்பட்ட நூல். நூலகத்தில் படித்தேன். மனம் மகிழ்ந்தேன். தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

நூலின் பெயர் : கணித நூல்
ஆசிரியர்    : கருவை நஞ்சையன்.
ஆசிரியர் பிறப்பிடம் : கருவூர் எனும் கரூர்.

எனைக் கவர்ந்த செய்யுள்,

“நாடிய பத்தொரு நூறா யிரம்பத்து லட்சம்பத்துக்
கோடியு மேசங்கு விந்தம் பதுமம்கு முர்தஞ்சிந்(து)
காடுவெள் ளம்பிரளை யஞ்சலம் வலம்புரி தன்பணையார்
தேடுங்  கண்வளை அனந்தம் மகாவென்று செப்பியதே

பத்து முதல் அனந்தம் வரை விளக்கம்:

10   பத்து = 100
100  பத்து = 1000
1000 பத்து = 10,000
10,000 பத்து = லட்சம்
1,00,000 பத்து = பத்து நூறாயிரம்
10 நூறாயிரம் பத்து   =  கோடி
கோடி     கோடி =  மகா கோடி (10,000,000,00,00,000)
மகாகோடி  கோடி = சங்கு(சங்கம்)
சங்கு(சங்கம்) கோடி = மகாசங்கு (மகாசங்கம்)
மகசங்கு    கோடி  = விந்தம்
விந்தம்     கோடி  = மகவிந்தம்
மகவிந்தம்  கோடி  = பதுமம் (சமுத்திரம்)
பதுமம்     கோடி  = மகாபதுமம் (மகா சமுத்திரம்)
மகாபதுமம்    கோடி  =  குமுதம்
குமுதம்       கோடி  =  மகா குமுதம்
மகா குமுதம்  கோடி  =  சிந்து
சிந்து          கோடி  =  மகா சிந்து
மகாசிந்து      கோடி  =  வெள்ளம்
வெள்ளம      கோடி  =  மகா வெள்ளம
மகா வெள்ளம் கோடி  =  பிரளயம்
பிரளயம்       கோடி  =  மகா பிரளயம்
மகா பிரளயம்  கோடி  =  சஞ்சலம்
சஞ்சலம்       கோடி  =  மகா சஞ்சலம்
மகா சஞ்சலம்  கோடி  =  வலம்புரி
வலம்புரி       கோடி  =  மகா வலம்புரி
மகா வலம்புரி  கோடி  =  தன்பணை
தன்பணை      கோடி  =  மகா தன்பணை
மகாதன்பணை  கோடி  =  கண்வளை
கண்வளை      கோடி  =  மகாகண்வளை
மகா கண்வளை கோடி  =  அனந்தம்


12 comments:

  1. அனந்தம் பற்றி தெரிந்து கொண்டதில் ஆனந்தம்!
    பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  2. உங்களிடம் இருந்து நிறைய எதிர் பார்க்கலாம் போல?

    ReplyDelete
  3. கோகுல் said...
    அனந்தம் பற்றி தெரிந்து கொண்டதில் ஆனந்தம்!
    பகிர்வுக்கு நன்றி!// நன்றி கோகுல்.

    முனைவர்.இரா.குணசீலன் said...
    நல்லதொரு பதிவு.// நன்றி ஐயா

    ReplyDelete
  4. Thanks. I liked this post. Is this word அனந்தம் Tamil word or root is sanskrit?. I would be happy to hear that this is a Tamil word. Writer Sujatha has used this word once while refering to one of the project he did in his college MIT. At that time I told my Telugu friend and he says the word is available in Telugu also. May be he referred aanantham.

    ReplyDelete
  5. "என் ராஜபாட்டை"- ராஜா said...
    New information. . . Thanks// Thanks Brother.

    MANASAALI said...
    உங்களிடம் இருந்து நிறைய எதிர் பார்க்கலாம் போல?// உங்கள் எதிர்பார்ப்புக்கு மிக்க நன்றி தலைவரே...

    ReplyDelete
  6. கடின முயற்ச்சி .கலக்றீங்க பாஸ்

    ReplyDelete
  7. வருகைக்கு மிக்க நன்றி குரு.

    ReplyDelete
  8. idha idha idhaththan eadhir parththen

    ReplyDelete
  9. idha idha idhaththan eadhir parththen

    ReplyDelete