திருமண
அழைப்பிதழ்களை மட்டுமல்ல, அனைத்து அழைப்பிதழ்கள்களையும் கையிற்
கொடுக்காமல் தாம்பூலத்தட்டுகளில் வைத்துக் கொடுப்பது எதனால் என்று தெரியுமா?!
அதாவது ஒருவர்
இன்னொருவரிடம் பொருளொன்றைக் கடனாகக் கொடுக்கையில் தட்டில் வைத்துத்தான்
கொடுப்பார்கள். அரிசி, நெல், மிளகாய், காய்கறிகள் முதலானவற்றைக் கொடுக்கையில்
முறத்தில் வைத்துத்தான் கொடுப்பார்கள். பணமாயிருந்தால் தட்டில் வைத்துத்தான்
கொடுப்பார்கள்.
இது எதனாலென்றால்,
கொடுப்பவரும்
வாங்குபவரும் பொருளாதார அளவில் மேல் கீழாய் இருந்தாலும் அந்த வேற்றுமை மனதில்
இல்லை என்பதை வெளிப்படுத்துவதற்காகவே...!
வெறுமனே கையால்
கொடுத்தால், கொடுப்பவர் கை
மேலும், வாங்குபவர் கை கீழும் இருக்கும்.
இம்மாதிரியான ஏற்றத்தாழ்வுகள் மனதளவில் கூட
தோன்றிவிடக்கூடாது என்பதற்காகவே “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்ற உயர்ந்த நோக்கத்தில் வாழ்ந்த நம்
தமிழர்கள், எந்தப் பொருளைக்
கொடுத்தாலும் அதைத் தட்டில் வைத்துக் கொடுப்பதுதான் வழக்கம். நம் முன்னோர்கள்
காட்டிய அதே அறநெறியில்தான் இன்றளவும் நாம் ஒருவரை அழைப்பதில்
பின்பற்றி வருகிறோம்.
எனவே, எந்த
அழைப்பிதழானாலும் கொடுக்கச் செல்லும்போது கூடவே ஒரு தாம்பூலத் தட்டையும்
எடுத்துச்செல்லுங்கள்.
காரணம் இல்லாமல்
தமிழன் எதையும் செய்யமாட்டன்...!
தமிழன்....
தலை
நிமிர்ந்தவன்....
சிறந்த பதிவு
ReplyDeleteதொடருங்கள்
Yarlpavanan Kasirajalingam said...
ReplyDeleteசிறந்த பதிவு
தொடருங்கள்
==========
வந்தமைக்கும் வாழ்த்தியமைக்கும் நன்றி ஐயா.