Followers

Sunday, March 6, 2011

நாயக்கரும் பாளையமும்


     பேரரசர்கள் தமக்குச் சொந்தமான நிலங்களை நாயக்கர்கள் என்ற அமைப்பை ஏற்படுத்தி அவர்களுக்கு வழங்கினர். இந்த நாயக்கர் முறையை பரந்து விரிந்த விஜயநகரப் பேரரசு ஏற்படுத்தியது. அரசியல் அதிகாரத்தைச் செலுத்தவும், வரி வசூல் செய்யவும், தேவையாயின் படை உதவி பெறவும் இம்முறையை பேரரசர்கள் பயன்படுத்தினர்.


         தமிழகத்தில் இம்முறை கிருஷ்ண தேவராயரின் காலத்திலேயே அறிமுகம் செய்யப்பட்டது. மூன்று நாயக்கர்கள் இங்கு நியமிக்கப்பட்டனர்.

                 1 .செஞ்சி நாயக்கர் - நெல்லுரிலிருந்து கொள்ளிடம் வரை (வேலுரையும் உள்ளடக்கியது).
                 2 .தஞ்சை நாயக்கர் - காவிரிப் பாசனப்பகுதிகளை உள்ளடக்கிய தஞ்சாவூர் பகுதிகள்.
                 3 .மதுரை நாயக்கர் - கொள்ளிடத்திலிருந்து கன்னியாகுமரி வரை.

       தொடக்க நிலையில் நாயக்கர் பதவி பரம்பரை பதவியாக இருக்கவில்லை. காலப்போக்கில் அது பரம்பரைப் பதவியாக மாறியது. நாயக்கர்களின் காலத்தில் அவர்களின் ஆட்சிக்குட்பட்ட பகுதிகள் பல ஆட்சிப்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன.  கிராமங்கள் ஊர், பட்டி, குறிச்சி, கோட்டை, மங்கலம், கிராமம், குடி போன்ற பெயர்களில் வழங்கப்பட்டன. கிராமங்களை ஒருங்கிணைத்து மாகாணம், நாடு எனப்பட்டது.  இந்த நாயக்கர் ஆட்சிக்காலத்தில் தமிழகத்தில் அறிமுகம் செய்யப்பட்டதுதான் பாளையக்காரர் முறை. இது ஒரு பொருளாதார மற்றும் படை மானிய முறையாக இருந்தது. பாளையம் என்ற சொல் ஒரு படை முகாமைக் குறித்தது.

மதுரை நாயக்கர்கள் உருவாக்கிய பாளையங்கள்:

  1. அம்மைய நாயக்கனூர்
  2. அத்திப்பட்டி
  3. அழகாபுரி
  4. ஆய்க்குடி
  5. ஆற்றங்கரை
  6. இளசை
  7. இரசயக்கயனுர்
  8. இலக்கையனூர்
  9. இடையக்கோட்டை
  10. இராமகிரி
  11. உதப்பனுர்
  12. ஊற்றுமலை
  13. ஊர்க்காடு
  14. எட்டையபுரம்
  15. ஏழுமலை
  16. ஏழாயிரம் பண்ணை
  17. கடலூர்
  18. கல்போது
  19. கன்னிவாடி
  20. கம்பம்
  21. கண்டமநாயக்கனுர்
  22. கவுண்டன்பட்டி
  23. கடம்பூர்
  24. காமயநாயக்கனூர்
  25. காடல்குடி
  26. காசையூர்
  27. குமரவாடி
  28. குளத்தூர்
  29. குருவிகுளம்
  30. கூடலூர்
  31. கொல்லப்பட்டி
  32. கொல்லங்கொண்டான்
  33. கோலார்பட்டி
  34. கோட்டையூர்
  35. கோம்பை
  36. சந்தையூர்
  37. சக்கந்தி
  38. சமுத்தூர்
  39. சேத்தூர்
  40. சிவகிரி
  41. சிங்கம்பட்டி
  42. சுரண்டை
  43. சொக்கம்பட்டி
  44. தலைவன்கோட்டை
  45. தேவாரம்
  46. தொட்டப்பநாயக்கனூர்
  47. தோகைமலை
  48. தும்பிச்சி நாயக்கனூர்
  49. நத்தம்
  50. நடுவக்குறிச்சி
  51. நாகலாபுரம்
  52. நிலக்கோட்டை
  53. நெற்கட்டும் செவல்
  54. படமாத்தூர்
  55. பாஞ்சலங்குறிச்சி
  56. பாவாலி
  57. பெரியகுளம்
  58. போடிநாயக்கனூர்
  59.  மணியாச்சி
  60. மருங்காபுரி
  61. மன்னார்கோட்டை
  62. மலைப்பட்டி
  63. மதவானையூர் 
  64. மதுவார்பட்டி
  65. முல்லையூர்
  66. மேல்மாந்தை
  67. ரோசலைபட்டி
  68. வடகரை
  69. வாராப்பூர்
  70. விருப்பாட்சி
  71. வெள்ளிக்குன்றம்
  72. வீரமலை 



No comments:

Post a Comment