Followers

Saturday, December 27, 2014

தமிழரின் பழமையின் புதுமை... நீட்டலளவையில் நீண்ட சரித்திரம்...





நமது தமிழ் பழம்பெருமை மிக்க மொழி. மூவாயிரம் ஆண்டுகள் அல்ல, முப்பதாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மூத்த மொழிதான் நம் தமிழ் மொழி. இது தற்போதைய அகழ்வாராய்ச்சி மூலம் இங்கிலாந்து அறிஞர்கள் கூறியது.
நாம் எப்போதும் வெளிநாட்டுக்காரன் கூறினால் தான் உண்மை என்று நம்புவோம்.  இல்லையெனில் வதந்தி என நாமே வதந்தி பரப்பிவிடுவோம். ‘சிவப்பாக இருப்பவன் பொய் சொல்ல மாட்டான் என்ற வடிவேலுவின் நகைச்சுவைதான் நினைவுக்கு வருகிறது.

என்றும் கன்னித்தமிழாம் நம் பைந்தமிழ் வளர்த்த கணித அறிவை என்னென்று சொல்வது... அணுக்களைப் பற்றிய கூற்றுகள் 17 ஆம் நூற்றாண்டில் தான் வெளிவந்தது. ஆனால் பல ஆயிரம் நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழர், அணுவின் அளவே அளவீடாக கொண்டு அளந்துள்ளனர் என்றால் பண்டைய தமிழரின் கணித அறிவுக்கு இணை எதுவுமே இல்லை. ஆனால் நம் வரலாற்றை பற்றிய அறிவு நமக்கே இல்லை எனும்போதுதான் மனம் சற்று வலிக்கிறது. நமது தமிழின் பெருமையை உலகறியச் செய்வோம். தமிழரின் அளவீடுகள் இதோ.....

நீட்டலளவைப் பற்றிய கோலளவு சூத்திரம்....

அணுவே பஞ்சுத் துகள்முனை நுண்மண லாங்கடுகு
உணுமே யெள்நெல் விரல்சா ணிரண்டே முழமொன்றே
நுணுமாந் தினமாகிய சிறுகோ லக்கோல் நான்காகில்
குணமே றென்றாம் பாரிது தான்குறிக் கோலிதுவே

நீட்டலளவுகள் :


அளவுக்கு முதல் அணு,


தமிழா... தமிழின் பெருமை உணர்வோம்... தமிழாய் வாழ்வோம்.
“தமிழுக்கு தொண்டு செய்தோன் சாவதில்லை

-   தொடரும்....


8 comments:

  1. தங்களின் தளத்திற்கு முதல் முறையாக வருகிறேன் அய்யா!!
    பல அரிய தகவல்கள்!
    முந்தைய பதிவுகளையும் பார்க்கிறேன்.
    தங்களைத் தொடர்கிறேன்.
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி... நண்பா....!

      Delete
  2. ஊமைக்கனவுகள் தளம் வழியே உங்கள் தளம் வருகிறேன்...

    அரிய தகவல்களுக்கு நன்றி. தொடருவோம்.

    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    எனது புதிய பதிவு : விடாது துரத்திய விஷ்ணுபுரம் !
    http://saamaaniyan.blogspot.fr/2014/12/blog-post_15.html
    தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. சாமானியன் தளத்தினைப் பார்த்தேன். நனி நன்று.

      Delete
  3. இணைத்து விட்டேன்... தோழரே!

    ReplyDelete
  4. தொடர்கிறேன்...

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. திண்டுக்கல் தனபாலன் ஐயா அவர்களுக்கு,நன்றியுடன் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

      Delete
  5. இந்த புத்தாண்டின் துவக்கம் உலகின் மனிதநேய மறுமலர்ச்சி விடியலாக அமையட்டும். ஜாதி, மத, மொழி, பிராந்திய வேற்றுமைகளை களைந்து மனிதம் வளர்ப்போம்.

    புத்தாண்டு நல்வாழ்த்துகள் !
    http://saamaaniyan.blogspot.fr/2015/01/blog-post.html

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    ReplyDelete