காய்கறிகளை சமைத்துச் சாப்பிடுவதால் அதிலிருக்கும்
சத்துக்கள் அழிந்து விடும் என்று பொதுவாக நாம் கருதுவதுண்டு. ஆனால் உண்மையில்
அப்படி நிகழ்வதில்லை என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
சமைக்கப்பட்ட பின்புதான் காய்கறிகளில் உள்ள சத்துக்கள்
உடம்பின் தேவைக்கு ஏற்றப்படி செயல்படுகின்றன என்றும்
மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
காய்கறிகளை சமைக்கும்போது உள்ள செல்லிலோஸ் எனும் பொருள் சிதைவடைகிறது.
இதனால் செல்களுக்குள் அடங்கி இருக்கும் உணவுச் சத்துக்கள் நம் உடலில் எளிதில்
செரிமானமாகி, எளிதில் ரத்தத்தில் கலந்து உடனடி பலனை நமக்கு ஏற்படுத்தித் தருகிறது.
கேரட் காயை பச்சையாகச் சாப்பிடும்போது ‘பீட்டா கரோட்டின்’ சத்து அவ்வளவாக
கிடைப்பதில்லை. அதே நேரத்தில் அவற்றை சமைத்துச் சாப்பிட்டால் அதிக அளவில் பீட்டா
கரோட்டின் சத்து நம் உடலுக்கு கிடைக்கிறது.
மேலும் சமைக்கப்படாத அவரை, துவரை, பட்டாணி,
முட்டைக்கோஸ், முள்ளங்கி போன்ற காய்கறிகளைப் பச்சையாக சாப்பிடும்போது இயக்கு நீரை
இயங்க விடாமல் செய்யும் வேதிப்பொருட்கள் அவற்றில் இருக்கும். இவற்றைச் சமைத்துச்
சாப்பிட்டால்தான் மற்ற சத்துக்கள் செரிமானமாவதற்கு பிரச்னை ஏற்படாது என்றும்
மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
பொரியல், வறுவல் இன்றி
ReplyDeleteபச்சைக் காய்கறிகளாயினும் சரி
அவித்த/ அரைவேக்காடு காய்கறிகளாயினும் சரி
உடலுக்கு சத்தானதே!
தங்களின் மேலான கருத்துக்கு மிக்க நன்றி.... ஐயா.
ReplyDeleteஅன்புடையீர், வணக்கம். மிகவும் பயனுள்ள பகிர்வு.
ReplyDeleteகீழே உள்ள இணைப்புக்கு தயவுசெய்து வருகை தாருங்கள். தங்களுக்கு ஓர் ஆச்சர்யம் அங்கு காத்துள்ளது:
http://gopu1949.blogspot.in/2015/07/34.html
அன்புடன் VGK