Followers

Tuesday, July 28, 2015

இரங்கற்பா - ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்








தடுமாறி விழுந்தது
தரையில் சூரியன்...!
தடம் மாறிப்போனது
தரணி முழுவதும்...!


வேரறுந்த மரமாய்
வீழ்ந்துதான் போனோம்...
காம்பறுந்த மலராய்
கதறித்தான் போனோம்....


கானல் நீரானாய்....
கண்களில் கடலானோம்!
காணவே முடியாமல்
காட்சிப் பிணமானோம்....!


அக்னிச் சிறகினில்
அகிலத்தைச் சுற்றினாய்....!
அக்னிதான் வேகுமோ...!
அகிலம்தான் தாங்குமோ...!


புவிநாடுகள் மிரண்ட
பொக்ரான் அணுகுண்டே...!
பொல்லாத அணுகுண்டாய்
சொல்லாமல் போனாயோ....!


இறப்பிற்கு இறப்பில்லையோ...
இதயத்திற்கு இதயமில்லையோ...
இயற்கைதான் விதிமுறை
இதுவரை மீறவில்லையோ...


ஆறுகளாய் இருந்திருந்தால்
ஆழியிடத்தில் செல்லலாம்....!
ஆறுதலுக்கும் வழியில்லை
யாரிடத்தில் செல்வோம்....!

               - சி.முத்தரசன்.

4 comments:

  1. டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் ஆன்மா சாந்தியடையட்டும்!

    ஆறுகளாய் இருந்திருந்தால் ஆழியிடத்தில் செல்லலாம்....! ஆறுதலுக்கும் வழியில்லை யாரிடத்தில் செல்வோம்....!

    அறிஞர் அப்துல்கலாமிற்கு; நாம் என்ன செய்யப் போகிறோம்?
    http://eluththugal.blogspot.com/2015/07/blog-post_28.html

    ReplyDelete
  2. மாமனிதர் கலாமுக்கு அஞ்சலி

    ReplyDelete
  3. வணக்கம்

    தங்களின் வலைதளம் இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    http://blogintamil.blogspot.fr/2015/08/blog-post.html

    நன்றி
    சாமானியன்

    ReplyDelete
  4. சிறந்த பகிர்வு


    புதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்
    இவ்வலைப்பூவில் நான் இதுவரை பேணிவந்த ஆறு வலைப்பூக்களை ஒன்றாக்கிப் பேணுகின்றேன்.
    http://www.ypvnpubs.com/

    ReplyDelete