முக்கழகம்
அமைத்து தமிழ் வளர்த்தோம். தமிழால் வளர்ந்தோம். கடல்கோளிற்கு முற்பட்ட தமிழ்நாடு,
மிகப்பெரும் நாடு. ஆனால் இன்று கடைக்கோடியில் ஒரு சிறு மாநிலம். அன்று முதல் இன்று
வரை சிறிது சிறிதாக நம் தனித்தன்மையை
இழந்து வருகிறோம். ஏன்?
1.
பிரிவினைக்குட்பட்டமை
2.
உயர்தரக் கல்வி மறுக்கப்பட்டமை
3.
அடிமைத்தன்மை
4. வறுமை
5.
தற்குலப்பகைமை
6.
மறம் மறந்துபோனமை
7.
பகுத்தறிவின்மை
8. தன் வரலாறு மறந்தமை
9. மொழி வரலாறு மறந்தமை
10. தாய்மொழி வெறுப்பு
தன்னுடைய உணவே சிறந்தது என்பதை விளக்க
அடுத்தவன் உணவில் நஞ்சு கலப்பது எவ்வகை முறைமை? தமிழ் மொழியில் நஞ்சென்று கலந்து
நிற்கும் வேற்றுமொழிச் சொற்களை நீக்கி நம்
அன்னைத் தமிழிலே அழகுறப் பேசுவோம். இனியும் நாம் விழிப்படையவில்லையென்றால் ‘’தமிழ்
இனி மெல்ல சாகும்’’ என்றவன் கூற்று மெய்ப்படும். அழகுத்தமிழிலே இனிய பெயரை வைப்பதை
விட புரியாத மொழியில் பெயர் வைப்பதை பெருமையாக கருதும் நிலை இப்போது வரை உள்ளது.
அந்த அளவிற்கு தமிழிலே ஆரியம் வேரூன்றி விட்டது. துவக்கத்தில் நாம் விழிப்புடனே
இருந்தோம். மெல்ல மெல்ல ஆரியம் உள்ளே நுழைந்து இன்று பெரு மலையாக மாறியுள்ளது.
தமிழுக்கு அது தலைவலியாக உள்ளது. தொழிலின் அடிப்படையில் மக்களைப் பிரித்து தங்களை
மட்டும் உயர்ந்தோர்கள் என்று தொடர்ந்து கூறி அதுவே உணமையென அனைவரையும் நம்ப வைத்து
தமிழ் தாழ்ந்தது, வடமொழி உயர்ந்தது கூறி பொய்முகம் காட்டி மெய் மறைத்து நின்றனர்.
இதில் வருந்தத்தக்கது என்னவெனில் பாட்டியிலில் கூட எழுத்துக்கும் செய்யுளுக்கும்
செய்யுள் நூலுக்கும் குலம் வகுத்துள்ளனர்.
அதாவது
12 உயிரெழுத்துக்களும் மெய்யெழுத்துக்களில் முதல் ஆறும் பார்ப்பன வரணம்; அடுத்த
ஆறுமெய்கள் அரச வரணம்; அதற்கு அடுத்த நான்கு மெய்கள் வணிக வரணம்; இறுதி இரண்டும்
சூத்திர வரணம் என்பதும்,
பார்ப்பனரை
வெண்பாவாலும், அரசரை ஆசிரியப்பாவாலும், வணிகரைக் கலிப்பாவாலும், சூத்திரரை
வஞ்சிப்பாவாலும் பாடவேண்டும் என்பதும்,
கலம்பகம்
பாடும்போது தேவருக்கு 1௦௦ செய்யுளும், பார்ப்பனருக்கு 95 செய்யுளும், அரசருக்கு 9௦
செய்யுளும், அமைச்சருக்கு 7௦ செய்யுளும், வணிகருக்கு 5௦ செய்யுளும், மற்றவர்க்கு
3௦ செய்யுளும் பாடவேண்டும் என்பதும் பாட்டியல் விதிகளாகும்.
இவை
தமிழுக்கு அலங்காரமா, இல்லை அலங்கோலமா? என்பதை நடுநிலையுடன் ஆய்ந்தறிந்து கொள்க.
தமிழுக்கும்
தமிழர்க்கும் மாறானவும் கேடானவும் ஆரியக்கருத்துக்கள் தமிழில் கலந்ததன் விளைவு
தமிழர் தன் தனித்தன்மையை இழந்துவிட்டனர்.
தமிழா...!
தமிழாய் இரு...!! தமிழனாய் இரு...!!!
இப்புத்தாண்டில் அனைவரின் நல்லெண்ணங்களும் நல்ல நிகழ்வுகளாய் ஈடேறி, மன நிம்மதியும் உடல் நலமும் நீடிக்க வேண்டுகிறேன்.
ReplyDelete- சாமானியன்
எனது புத்தாண்டு பதிவு... " மனிதம் மலரட்டும் ! "
http://saamaaniyan.blogspot.fr/2016/01/blog-post.html
தங்களுக்கு நேரமிருப்பின் படித்து, கருத்திட வேண்டுகிறேன். நன்றி