ஆபிரஹாம் லிங்கனின் மறுபிறவிதான் ஜான் கென்னடியா? அதற்கு வலுவான ஆதாரங்கள்
ஏதேனும் உண்டா? மறுபிறவி, கடவுளின் செயல், விதி இவற்றைப் பின்பற்றி
வந்திருப்பார்களோ? நடந்தது என்ன?
வரலாற்றில் சரித்திரப்புகழ் பெற்ற இரு அமெரிக்க ஜனாதிபதிகளின் இருபது பொருத்தங்களைப் பார்க்கலாம். பொருத்தம் பத்துதானே! இதென்ன பதினாறு...? பார்ப்போம், அவை என்னவென்று,
வரலாற்றில் சரித்திரப்புகழ் பெற்ற இரு அமெரிக்க ஜனாதிபதிகளின் இருபது பொருத்தங்களைப் பார்க்கலாம். பொருத்தம் பத்துதானே! இதென்ன பதினாறு...? பார்ப்போம், அவை என்னவென்று,
1. லிங்கன் 1860 லும் கென்னடி 1960 லும் ஜனாதிபதி ஆனார்கள். இருவருக்கும்
சரியாக 100 வருடம்.!
2. இருவரும் நீக்ரோ இனத்தினரின் உரிமைகளில்
தீவிரமாக ஆழ்ந்திருந்தார்கள்.
3. இருவரும் வெள்ளிக்கிழமை தத்தம் மனைவிகளின்
அருகில் இருக்கும்போது, சுட்டுக்கொல்லப்பட்டார்கள்.
4. இரு மனைவியரும் வெள்ளை
மாளிகையில் வாழும்போது பிள்ளைப் பெற்று, பிறந்ததும் குழந்தை இறந்தது.
5. கென்னடி, லிங்கன் இருவரும் தலையின் பின்
பகுதியில் குண்டு துளைத்து செத்தார்கள்.
6. லிங்கன் இறந்தது போர்டு அரங்கத்தில்.
கென்னடி இறந்தது லிங்கன் என்ற பெயர் கொண்ட காரில்! அந்த காரை தயாரித்தது போர்டு
மோட்டார் கம்பெனி..!
7. இருவரும் இறந்த பின்னர், ஜான்சன் என்ற
பெயருள்ளவர்கள் ஜனாதிபதியாக பதவியேற்றுக் கொண்டார்கள். அவர்கள், ஆண்ட்ரு ஜான்சன்,
லிண்டன் ஜான்சன்.
8. ஆண்ட்ரு ஜான்சன் பிறந்தது 1808. லிண்டன் ஜான்சன் பிறந்தது 1908. இருவருக்கும் இடையே சரியாக 100 வருடம்.
9. லிங்கன் செயலாளர் முன் பெயர் ஜான்.
அதேபோல் ஜான் கென்னடியின் செயலாளரின் பின் பெயர் லிங்கன்.
10. இருவரையும் கொன்றவர்கள் பிறந்த
வருடங்கள் ஜான் வில்க்ஸ் பூத் 1839. லீ ஹார்வி ஆஸ்வால்டு 1939. சரியாக நூறு வருடம்.
11. கொன்ற இருவரும் தென்மாநிலத்
தீவிரவாதிகள்.
12. இருவரும் பிடிபட்டு, வழக்குத்
தொடுப்பதற்குள் சுட்டுக்கொல்லப்பட்டார்கள்.
13. லிங்கன் போர்ட் திரையரங்கில் சுட்டுக் கொல்லப்பட்டார். கென்னடி, லிங்கன் என்ற காரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இதில் அந்த காரைத் தயாரித்தது போர்ட் கம்பெனி.
14. பூத் லிங்கனை ஒரு (fort theater) அரங்கத்தில் கொன்றுவிட்டு
ஒரு கிடங்கு நோக்கி ஓடினான். ஆஸ்வால்டு, ஒரு கிடங்கிலிருந்து கொன்றுவிட்டு ஒரு
அரங்கத்தை நோக்கி ஓடினான்.
15. லிங்கன், கென்னடி இரண்டு
பெயர்களும் (Lincoln, Kennedy) ஆங்கிலத்தில் ஏழு எழுத்துக்கள்.
16. அடுத்த ஜனாதிபதியான ஆண்ட்ரு ஜான்சன்,
லிண்டன் ஜான்சன் இருவர் பெயரும் ஆங்கிலத்தில் 13 எழுத்துகள்.
17. கொன்றவர்களான ஜான் வில்க்ஸ் பூத், லீ
ஹார்வி ஆஸ்வால்டு இருவர் பெயரும் 15 எழுத்துக்கள். ஆங்கிலத்தில்தான்.
18. ஆபிரகாம் லிங்கன் 1846
ல் காங்கிரஸ் (நாடாளுமன்றம்) க்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஜான் எப் கென்னடி 1946 ல் காங்கிரஸ் (நாடாளுமன்றம்) க்குத்
தேர்ந்தெடுக்கப்பட்டார். சரியாக நூறு வருடம்!
19. லிங்கன் 1856 இல் துணை ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற முடியவில்லை. கென்னடி 1956 ல் துணை
ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி
பெற முடியவில்லை. அட, இங்கேயும் நூறு வருடம்.
20. லிங்கன் 1813 ஆம் ஆண்டில் பிறந்த ஸ்டீபன் டக்ளஸ் என்பவரை
தோற்கடித்தார். கென்னடி 1913 ல் பிறந்த ரிச்சர்ட் நிக்சன் என்பவரை தோற்கடித்தார்.
இங்கேயும் நூறு வருடம்.
நிறைவாக,
லிங்கன் முதல்முறை ஜனாதிபதி பதவிக்கு மனு
போடும்போது, ஜான் கென்னடி என்பவரை துணை ஜனாதிபதியாக பரிந்துரைத்தார்.
என்ன பொருத்தம், எத்தனைப் பொருத்தம்.
இவையெல்லாம் தற்செயலா? உண்மையில் லிங்கனின் மறுபிறவிதான் ஜான் கென்னடியா? என்றே நினைக்கத் தொன்றும். ஆனால் வாழ்க்கை
என்பது பல்லாயிரக்கணக்கான சம்பவங்களால் நிறைந்தது.
இந்த நிலையில் எந்த இருவரின் வாழ்க்கையை எடுத்துக்கொண்டு சம்பவங்களை ஒப்பிட்டுப்
பார்த்தாலும் ஒரு பத்து பதினைந்து பொருத்தங்கள் இருக்கத்தான் செய்யும். மேற்காணும்
யாவும் சம்பவங்கள் நிகழ்ந்த பிறகு ஒப்பிட்டு பார்க்கப்பட்டன. இவ்வாறு ஒப்பிட்டுப்
பார்க்கும்போது அவற்றில் ஒற்றுமை இருப்பதைக் கண்டுப்பிடிப்பது எளிதான செயல்.
நடக்கப் போவதை சொன்னால்தான் அவை அதிசியம். இதுவரை பார்த்தவை எல்லாம் அதிசியம்
இல்லை. ஆச்சரியப்பட வைத்ததில் சில. அவ்வளவே.
அருமை அண்ணா.... சூப்பர்.
ReplyDeleteஆச்சரியம் அல்ல... அதிசியம்.....!
ReplyDeleteVenkat Murugan said...
ReplyDeleteஅருமை அண்ணா.... சூப்பர்.
==============
வாங்க தம்பி....
வாங்க ரமேஷ்.... எங்க ரொம்ப நாளா ஆளையே காணோம்....!
ReplyDelete