சொத்துக்
குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளதால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் அவர்
முதலமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பதவிகளில் இருந்து தகுதி நீக்கம்
செய்யப்பட்டுள்ளார்.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ், ஏற்கனவே 5 பேர் பதவியை இழந்துள்ள நிலையில், தற்போது 6வதாக அப்பட்டியலில் ஜெயலலிதாவும் சேர்க்கப்பட்டுள்ளார்.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ், ஏற்கனவே 5 பேர் பதவியை இழந்துள்ள நிலையில், தற்போது 6வதாக அப்பட்டியலில் ஜெயலலிதாவும் சேர்க்கப்பட்டுள்ளார்.
காங்கிரஸ்
கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினரான ரஷீத் மசூத், கடந்தாண்டு செப்டம்பர் மாதம், தனது பதவியை இழக்க நேரிட்டது. வி.பி.சிங்
பிரதமராக இருந்த போது, அவரது
அமைச்சரவையில், ரஷீத் மசூத்,
சுகாதாரத்துறை அமைச்சராக
இருந்தார். அப்போது, தனது அதிகாரத்தை
துஷ்பிரயோகம் செய்து,திரிபுரா
மருத்துவக் கல்லூரியில், தகுதியில்லாத மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ். படிப்புக்கு இடம் ஒதுக்கீடு
செய்தார் என குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதைத்
தொடர்ந்து அவரது மாநிலங்களவை உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது. மக்களவை
பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ், பதவி இழந்த முதல் இந்திய அரசியல்வாதியும் இவரே.
ராஷ்ட்ரிய ஜனதா
தளம் கட்சியின் தலைவரும், பீகாரின் முன்னாள் முதலமைச்சருமான லாலு பிரசாத் யாதவ் மீதான மாட்டுத் தீவன
ஊழல் வழக்கில், சி.பி.ஐ. சிறப்பு
நீதிமன்றம், அவருக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது. கடந்தாண்டு
வெளியிடப்பட்ட இந்த தீர்ப்பின் காரணமாக லாலு பிரசாத், சரண் தொகுதியின் எம்.பி. பதவியை இழந்தார். இதே
வழக்கில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த ஜெகதீஷ் ஷர்மாவும், 4 ஆண்டு சிறைத் தண்டனை பெற்றதால்,ஜஹன்னாபாத் தொகுதியின் எம்.பி. பதவியை
இழந்தார்.
இதேபோல் சிவசேனா
கட்சியைச் சேர்ந்த பாபன்ராவ் கோலப், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் குற்றவாளி என
அறிவிக்கப்பட்டார். இவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதனை உறுதி செய்த உச்ச நீதிமன்றம்,
வாழ்நாள் முழுவதும்
தேர்தலில் போட்டியிட பாபன்ராவுக்கு தடைவிதித்தது.
தமிழகத்தில்,
திமுக-வைச் சேர்ந்த
டி.எம்.செல்வகணபதி, சுடுகாட்டு ஊழல்
வழக்கில் 2 ஆண்டுகள் சிறைத்
தண்டனை பெற்றார். இதன் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் அவர் தனது மாநிலங்களவை
உறுப்பினர் பதவியை இழந்தார்.
No comments:
Post a Comment