Followers

Saturday, October 8, 2011

சில சுவையான செய்திகள்




சனி நீராடு :
சனி நீராடு என்றால் ஆண்கள் சனிக்கிழமை தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும் என்பது அல்ல. சனி என்றால் குளிர்ச்சி என்று பொருள்.சனி நீராடு என்றால் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும் என்பதாகும்.



எலும்புகள் :
சிறு குழந்தைகளின் உடலில் 350 எலும்புகள் இருக்கும். வயது ஆக ஆக எலும்புகள் ஒன்றாக சேர்ந்துவிடுவதால் 206 எலும்புகளே இருக்கும்.


லைட் ஹவுஸ் :
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள லைட் ஹவுஸின் உயரம் 58 மீட்டர். இதன் ஒளி 3000 வாட் திறன் கொண்டது. இதன் மேற்பகுதி எளிதாக சுழல்வதற்கு இதன் உட்பகுதி பாதரசம் நிரப்பப்பட்டுள்ளது. இது ஹாலந்து நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதன் வெளிச்சம் 18 கடல் மைல் தொலைவு தெரியும்.


மரம் :
பறவைகள் மரங்களின் மீது அமர்வது மட்டுமின்றி கூடு கட்டியும் வாழும். ஆனால் இலந்தை மரத்தில் மட்டும் வாழாது. பறவைகள் வெறுத்து ஒதுக்கும் ஒரே பழமும் இலந்தை பழங்கள்தான்.


பெயர்க்காரணம்:
தாய், தந்தை என்ற பெயர்களுக்கு காரணம் என்ன தெரியுமா?
குழந்தையை தாவி எடுத்து தழுவுதலால் தாய் என்ற பெயர் வந்தது. குழந்தையை தந்த தலைவன் தந்தை. தந்த ஐ இரண்டும் சேர்ந்து தந்தை ஆயின.

தங்கைக்கும் தமக்கைகும் எவ்வாறு பெயர் அமைந்தது தெரியுமா....?
தன் கையே போதும் என்று நினைப்பவள் தங்கை.
எல்லாம் தமக்கே என்று நினைப்பவள் தான் தமக்கை.(பட்டினத்தார் கூறியது )



5 comments:

  1. இலந்தை மரமா வளருமா, நான் செடின்னு தான் இத்தனை நாளா நினைசிகிட்டு இருந்தேன்... தேங்க்ஸ்

    ReplyDelete
  2. சனி நீராடு புதிய விளக்கம்.உண்மையான விளக்கமும்கூட

    ReplyDelete
  3. suryajeeva said...
    இலந்தை மரமா வளருமா, நான் செடின்னு தான் இத்தனை நாளா நினைசிகிட்டு இருந்தேன்... தேங்க்ஸ்//
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  4. கோகுல் said...
    சனி நீராடு புதிய விளக்கம்.உண்மையான விளக்கமும்கூட//

    வாங்க நண்பா...

    ReplyDelete