Followers

Wednesday, October 12, 2011

முடிந்தால் பதில் சொல்லுங்கள் ...!






     நாங்கள் இரவு - மின்வெட்டு நேரத்தில் விடுகதையிட்டு விளையாடிக்கொண்டு இருந்தோம். அச்சமயம் எங்களைக் கடந்து சென்ற ஒரு பாட்டி எங்களிடம் விடுத்த விடுகதை இது. விடை சொல்லுங்கள் பார்ப்போம். 

1) ஆதி காலத்தில்

அப்பனை விட்டவள் ...
அறிவுள்ள கையில்
வந்து அமர்ந்தவள் ...
வெட்டுக்கும் கட்டுக்கும்
கட்டுப்பட்டவள்....
வேதனையில் மேனி கிழிந்தவள்
ஏற்றி மஞ்சளும் வைப்பாள்...
பொட்டும் வைப்பாள்...
ஆனால், அவள் பெண்ணல்ல.
அது என்ன....?


2) ஆடாத அழகி ஆடென்று பெயர் பெற்றாள்...
அது என்ன?


       விடை :  1 ) பனை ஓலை 
                 2 ) ஆடு 

11 comments:

  1. மூளைக்குள்ள குப்பைகளை நிறைச்சி வெச்சாச்சி சார். சிந்திக்க மறந்துடுச்சி.

    அதனால, நீங்களே சொல்லிடுங்க. மனப்பாடம் பண்ணி வெச்சி, வேற யாராவது இத கேக்கும்போது சரியா பதில் சொல்லிடுவோம்.

    ( நம்ம கல்வி முறை இதைத் தானே கத்து குடுக்குது நமக்கு?)

    ReplyDelete
  2. என்னால் முடியாதய்யா!
    ஏதோ தேர்தல் நேரம்
    ஓட்டு மட்டும் போட்டேன்

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  3. மதுரை சரவணன் said...
    theriyaliyee pathil sollungka..//

    சொல்லிடுவோம்...

    ReplyDelete
  4. சத்ரியன் said...
    மூளைக்குள்ள குப்பைகளை நிறைச்சி வெச்சாச்சி சார். சிந்திக்க மறந்துடுச்சி.

    அதனால, நீங்களே சொல்லிடுங்க. மனப்பாடம் பண்ணி வெச்சி, வேற யாராவது இத கேக்கும்போது சரியா பதில் சொல்லிடுவோம்.

    ( நம்ம கல்வி முறை இதைத் தானே கத்து குடுக்குது நமக்கு?)//

    சரிங்க. விடை சொல்லிடுறேன். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  5. MANASAALI said...
    1.பனை ஓலை ஏடு//

    அட. கண்டுபிடிச்சிடிங்க. சரியான விடை.
    வாழ்த்துக்கள். 2.?

    ReplyDelete
  6. suryajeeva said...
    முடியல//

    இப்பவே கண்ண கட்டுதுங்களா...?

    ReplyDelete
  7. புலவர் சா இராமாநுசம் said...
    என்னால் முடியாதய்யா!
    ஏதோ தேர்தல் நேரம்
    ஓட்டு மட்டும் போட்டேன்

    புலவர் சா இராமாநுசம்//

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete