Followers

Friday, December 24, 2010

* பலாப் பழத்தின் உள்ளிருக்கும் சுளைகளின் எண்ணிக்கை அறிய ...



                                  பலாவின் சுளையறிய வேண்டுதிலேல் ஆல்கு
                                  சிறுமுள்ளுக் காம்பரு எண்ணி - வருவதை 
                                  ஆறிற் பெருக்கியே ஐந்தனுக் கீந்திடவே 
                                  வேறெண்ண வேண்டாஞ் சுளை.
                                                                                                           -  கணக்கதிகாரம் 

 விளக்கம் : பழந்தமிழ் சோழர் காலத்திலேயே எழுதப்பட்ட கணக்கதிகாரம் என்ற நூலில் பலாபழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையை அறிந்துகொள்ளும்  வழிமுறை மிக எளிமையாகக் கூறப்பட்டுள்ளது.


         பலாப்பழத்தின் காம்புக்கு அருகில் உள்ள சிறு முட்களை எண்ணி ஆறாலே பெருக்கி ஐந்தால் வகுக்க பலாப்பழத்தினுள் உள்ள சுளைகளின் எண்ணிக்கையை அறியலாம்.      
            

6 comments:

  1. நிஜமாவா? சூப்பரா இருக்கே இது!
    -பாபு கோதண்டராமன்

    ReplyDelete
  2. வருகைக்கு மிக்க நன்றி பாபு .

    ReplyDelete
  3. கருத்துரைக்கு மிக்க நன்றி.... மதுரை சரவணன் அவர்களே....

    ReplyDelete
  4. அன்புள்ள நண்பருக்கு கணக்கதிகாரத்தில் இருந்து நானும் சில பதிவுகளை பதிவேற்றி உள்ளேன் .நேரமிருந்தால் வருகை தரவும்
    www.nilanilal.blogspot.com

    ReplyDelete
  5. நண்பரே... தங்கள் தளத்தை பார்த்தேன். அருமை. கணக்கதிகார கணக்கிற்கு விடையும் தந்துள்ளேன். பார்த்துவிட்டு சொல்லுங்கள் நண்பா...

    ReplyDelete