Followers

Tuesday, May 31, 2011

காத்து... கருப்பு....



           மக்களுக்கு இன்று வரை பேய் பிசாசுகள் பற்றி பயம் இருக்கத்தான் செய்கிறது. இன்று கூட இரவு நேரத்தில்  வெளியூர் பயணத்தை மேற்கொள்ளும் பொது, இப்போது வேண்டாம்; காத்து கருப்பு அடித்து விடும்; விடிந்த பின் போகலாம் என்பார்கள். 

அழகிய இளந்தளிரே .....




ஒற்றை நிமிடத்தில் உயிர் பிரியும்
ஒற்றை நொடியிலும் உனைப் பிரியேன்


எந்தன் நெஞ்சின் நாளத் துடிப்பும்
உந்தன் பெயர்தான் காதல் துடிப்பாம்


Tuesday, May 24, 2011

இந்தியாவில் முதன் முதலில்..... (மகளிர் மட்டும்)



1. இந்தியாவில் முதன் முதலில் சுயேட்சையாக தேர்தலில் நின்று வெற்றிப்  பெற்ற முதல் இந்தியப் பெண்     -    Dr.S. முத்துலெட்சுமி ரெட்டி.

2. இந்தியாவின் முதல் பெண் முதலமைச்சர் - சுகேதா கிருபளானி ( உ.பி )

3. இந்தியாவின் முதல் பெண் அமைச்சர்    -    விஜயலட்சுமி பண்டிட்  ( உ.பி )

Saturday, May 21, 2011

பழந்தமிழரின் பன்னிரு மாதங்கள்




          தமிழர் பன்னெடுங்காலமாக பயன்படுத்தி வந்த தமிழ் மாதங்களின் பெயர்களைத் தற்போது மறந்து விட்டு ஆரியர்கள் கொண்டு வந்த பன்னிரு மாதங்களையே இன்று நாம் பின்பற்றி வருகிறோம்.  அதாவது சித்திரை முதல் பங்குனி வரை உள்ள மாதங்களை ஆரியர்கள் தான் கொண்டு வந்தார்கள்.   இன்று  தமிழக அரசு தை மாதத்தை தமிழர்களின் முதல் மாதமாக ஆணையிட்டு அறிவித்துள்ளது. தற்போதைய அரசு மறுபடியும்  சித்திரையையே கொண்டு வந்துவிட்டது.   இருப்பினும்  நாம் தை மாதத்தை சுறவம் என்ற மாதமாக தான் பின்பற்றி வந்தோம். ஆரியர்களின் புனர்தை என்பதில் தை என்ற ஈறு எழுத்தை மட்டும்  நமக்கு தந்துவிட்டனர். ஆரியர்களின் முதல் மாதம் சைத்திரா என்பதை தமிழரின் முதல் மாதம் சித்திரை என நம் மீது  திணித்துவிட்டனர். 

                 தமிழ் மாதங்களாக மாற்றப்பட்ட ஆரிய மாதங்கள்

Wednesday, May 18, 2011

பொன்னாங்கண்ணிக் கீரைக்கு 83 பெயர்கள்



      இந்தியாவில் பல வகை கீரைகள் உணவாக உட்கொள்ளப்படுகின்றன. உணவிற்காக மட்டுமல்லாமல் மருத்துவப் பயன் கருதியும் கீரைகள் உண்ணப்படுகின்றன. அவற்றில் மிகவும் பெயர் பெற்றவை, அரைக்கீரை, தண்டு கீரை, புளிச்சைக்கீரை, வெந்தயக்கீரை, முருங்கைக் கீரை மற்றும் பொன்னாங்கண்ணி கீரை போன்றவையாகும்.

Tuesday, May 17, 2011

தமிழக முதல்வர்கள்



           நாம்  சுதந்திரம் பெறுவதற்கு முன்பிலிருந்து இன்று வரை அதாவது தமிழகத்தின் முதல் முதலைமைச்சர் முதல் இன்றுவரை உள்ள  மாண்புமிகு  முதலமைச்சர்களின் பட்டியல் இதோ !

Monday, May 16, 2011

தமிழக புதிய அமைச்சர்கள்


                

              தமிழக முதல்வராக மூன்றாவது முறையாக, அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா இன்று (16 .05 .2011 ) பகல், 12.15 மணிக்கு, சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு அரங்கில் பதவி ஏற்கிறார். நடந்து முடிந்த  தமிழக  சட்டசபை     பொதுத்  தேர்தலில்,  அ.தி.மு.க., 146  தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன், புதிய அரசை  அமைக்கிறது. இந்நிலையில் இன்று  பதவியேற்க உள்ள அமைச்சர்களின் பட்டியல் நேற்று மாலையிலேயே  வெளியிடப்பட்டது..[ஞாயிற்றுக்கிழமை, 15. மே. 2011, 04:45  PM ]



தமிழக புதிய அமைச்சர்களின் பெயர் பட்டியல்:

 1. ஜெ. ஜெயலலிதா - முதல்வர்.
2. ஓ. பன்னீர்செல்வம் - நிதி அமைச்சர்.
3. கே.ஏ. செங்கோட்டையன் - விவசாயத்துறை அமைச்சர்.
4. நத்தம் ஆர். விஸ்வநாதன் - மின்சாரத்துறை அமைச்சர்.
5. கே.பி. முனுசாமி - உள்ளாட்சித்துறை அமைச்சர்.
6. சி. சண்முகவேலு - தொழில்துறை அமைச்சர்.
7. ஆர். வைத்திலிங்கம் - வீட்டுவசதித்துறை அமைச்சர்.
8. அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி - உணவுத்துறை அமைச்சர்.
9. சி. கருப்பசாமி - பால் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர்.
10. பி. பழனியப்பன் - உயர்கல்வித்துறை அமைச்சர்.
11. சி.வி. சண்முகம் - பள்ளிகல்வித்துறை அமைச்சர்.
12. செல்லூர் கே. ராஜு - கூட்டுறவுத்துறை அமைச்சர்.
13. கே.டி. பச்சமால் - வனத்துறை அமைச்சர்.
14. எடப்பாடி கே. பழனிசாமி - நெடுஞ்சாலைத்துறை அமைச்சர்.
15. எஸ்.பி. சண்முகநாதன் - இந்து அறநிலையத்துறை அமைச்சர்.
16. கே.வி. ராமலிங்கம் - பொதுப்பணித்துறை அமைச்சர்.
17. எஸ்.பி. வேலுமணி - சிறப்புத் திட்டத்துறை அமைச்சர்.
18. டி.கே.எம். சின்னையா - பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்.
19. எம்.சி. சம்பத் - ஊரக தொழில்துறை அமைச்சர்.
20. பி. தங்கமணி - வருவாய்த்துறை அமைச்சர்.
21. ஜி. செந்தமிழன் - செய்தித்துறை அமைச்சர்.
22. எஸ். கோகுல இந்திரா - வணிக வரித்துறை அமைச்சர்.
23. செல்வி ராமஜெயம் - சமூகநலத்துறை அமைச்சர்.
24. பி.வி. ராமண்ணா - கைத்தறி, ஜவுளித்துறை அமைச்சர்.
25. ஆர்.பி. உதயகுமார் - தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர்.
26. என். சுப்பிரமணியன் - ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர்.
27. வி. செந்தில் பாலாஜி - போக்குவரத்துத்துறை அமைச்சர்.
28. என். மரியம் பிச்சை - சுற்றுச்சூழல் அமைச்சர்.
29. கே.ஏ. ஜெயபால் - மீன்வளத்துறை அமைச்சர்.
30. இ. சுப்பையா - சட்டத்துறை அமைச்சர்.
31. புதிசந்திரன் - சுற்றுலாத்துறை அமைச்சர்.
32. எஸ்.டி. செல்லபாண்டியன் - தொழிலாளர் நலத்துறை அமைச்சர்.
33. வி.எஸ். விஜய் - சுகாதாரத்துறை அமைச்சர்.
34. என்.ஆர். சிவபதி - விளையாட்டுத்துறை அமைச்சர்.


Sunday, May 15, 2011

வைணவத்தில் வடகலை மற்றும் தென்கலை


இராமானுஜர் காலத்தில் வைணவம் புத்துணர்வுப் பெற்றது. இராமானுஜர் காலத்திற்குப் பிறகு வைணவர்களிடையே வடகலை மற்றும் தென்கலை வைணவர்கள் என்ற இரு பிரிவுகள் தோன்றின. வேங்கட நாதர் என்ற வேதாந்த தேசிகர் என்பார் காஞ்சிபுரத்திற்கு அருகில் துப்பில் எனும் கிராமத்தில் பிறந்தார். பதின்மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றிய இவர் வைணவர்களிடையே வடகலை எனும் பிரிவு தோன்றக் காரணமாக இருந்தார். ஏறத்தாழ அதே காலக்கட்டத்தில் ஆழ்வார் திருநகரியில் தோன்றிய மணவாள மகாமுனி என்பார் தென்கலை எனும் பிரிவு தோன்றக் காரணமாக இருந்தார்.

Thursday, May 12, 2011

ஆவி உலகின் தோற்றம்


   
      ஆரம்ப காலத்தில் மனிதர்கள் கூட்டமாய், குலமாய் வாழ்ந்தனர். குலம் என்பது கணம் என்றழைக்கப்பட்டது. ஒவ்வொரு குலத்துக்கும் ஒரு தலைவன் இருந்தான். அவனை குலபதி, கணபதி என்றழைத்தனர்.

Wednesday, May 11, 2011

உலகத்தின் முக்கிய எல்லைக் கோடுகள்

 
1. இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான எல்லைக்கோடு 
   
  ரெட்கிளிப் எல்லைக்கோடு.

2. இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையேயான எல்லைக்கோடு  

   மக்மோகன்  எல்லைக்கோடு.

தமிழும் தாவரமும்....




தமிழ் ஓர் இயற்கை மொழி. இயற்கையாகிய பயிரினமும் விலங்கியல் உயிரினமும் தாம் மொழிப்பொருளையும் சொற்பெருக்கத்தையும் வழங்கியிருக்கிறது என்ற உண்மை பலருக்கு வியப்பூட்டலாம். நாம் படிப்பதற்கு பயன்படுத்தும் இதழ், ஏடு, சுவடி, மலர் போன்றவைகளும் எழுதப்பயன்படுத்தும் பொருள்களும் தாவரம் தமிழுக்கு அளித்தவை.