Followers

Wednesday, December 28, 2011

கணித ஆண்டாக பூக்கும் புத்தாண்டு
கணித உலகின் ஓர் ஒப்பற்ற ஒளிவிளக்கு, கணித சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தி, எண்களின் இராணுவத் தளபதி, எண்ணில் அடங்காத எண்களின் தோழன். ஆம்! உலகம் போற்றும் கணிதத் தலைவன் ராமனுஜன். தமிழகத்தில் பிறந்து உலகினில் உயர்ந்த கணித மாமேதை. இவரின் பிறந்த நாளை முன்னிட்டு நம் பாரத பிரதமர் வரும் புத்தாண்டை (2012) கணித ஆண்டாக அறிவித்தார். இது ராமானுஜரால் கணிதத்திற்கு கிடைத்த பெருமை.

Wednesday, October 12, 2011

முடிந்தால் பதில் சொல்லுங்கள் ...!


     நாங்கள் இரவு - மின்வெட்டு நேரத்தில் விடுகதையிட்டு விளையாடிக்கொண்டு இருந்தோம். அச்சமயம் எங்களைக் கடந்து சென்ற ஒரு பாட்டி எங்களிடம் விடுத்த விடுகதை இது. விடை சொல்லுங்கள் பார்ப்போம். 

1) ஆதி காலத்தில்

அப்பனை விட்டவள் ...
அறிவுள்ள கையில்
வந்து அமர்ந்தவள் ...
வெட்டுக்கும் கட்டுக்கும்
கட்டுப்பட்டவள்....

Monday, October 10, 2011

இப்படியும் சொல்லலாம்...

அதிகாரி :
     நாம் எப்போதாவது தாமதமாகப் போனால் முன்னாடியே வருபவர்; நாம் சீக்கிரமாகப் போனால் தாமதமாக வருபவர்.


அணுகுண்டு :
     கண்டுபிடிப்புகள் அனைத்தையும் முடிவுக்குக் கொண்டுவரும் கண்டுபிடிப்பு.


Sunday, October 9, 2011

இராமானுசன் எண்கள்


       கணித உலகின் கடைசி சக்ரவர்த்தி, கணிதத்தோடு இரண்டற கலந்த மாமேதை, திரு. இராமனுசனார் அவர்கள் கணிதத்திற்கு ஆற்றிய தொண்டினை என்னென்று சொல்வது. கணிதத்திற்கு ஒரு புத்துயிர் ஊட்டியவர். கணிதத்தில் ஒரு புது எண் வரிசையைக் கண்டறிந்தார். அந்த எண்கள் தான் இராமனுசன் எண்கள் என்று அழைக்கப்படுகின்றன.

Saturday, October 8, 2011

சில சுவையான செய்திகள்
சனி நீராடு :
சனி நீராடு என்றால் ஆண்கள் சனிக்கிழமை தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும் என்பது அல்ல. சனி என்றால் குளிர்ச்சி என்று பொருள்.சனி நீராடு என்றால் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும் என்பதாகும்.

Thursday, October 6, 2011

ஒன்பதைப் பற்றி தெரிந்துகொள்வோம்

1. பைசா கோபுரம் ஒன்பது மாடிகளைக் கொண்டது.

2. ஆக்யங் எனும் தேளுக்கு ஒன்பது கொடுக்குகள் உள்ளன.

Wednesday, October 5, 2011

இன்னுமா உடன்கட்டை...?சின்னஞ்சிறு வயதில்
தன்னந்தனியாக
தவித்திருந்த என்னை
தத்தெடுத்தார்...
தவமென பாதுகாத்தார்....

Tuesday, October 4, 2011

திருக்குறள் – சில தெரியாத செய்திகள்


     திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார். திருக்குறள் மொத்தம் 133 அதிகாரங்களும் 1330 குறட்பாக்களும் அறம், பொருள், இன்பம் என முப்பெரும் பிரிவுகளையும் உள்ளடக்கியது என்பது யாவரும் அறிந்தது. ஆனால் திருக்குறளைப் பற்றி சில தெரியாத செய்திகள் இதோ.....

1. ஓலைச்சுவடிகளில் இருந்த திருக்குறள் 1612 ஆம் ஆண்டு முதன் முதலில் அச்சிடப்பட்டது.

Monday, October 3, 2011

யாருக்கு எத்தனை அறிவு?

எத்தனை பெரிய மனிதருக்கு எத்தனை சிறிய மனமிருக்கு, எத்தனை சிறிய பறவைக்கு எத்தனை பெரிய மனமிருக்கு... என்று பாட தோன்றினாலும் நம் முன்னோர்கள் ஆறறிவு வரை உயிரினங்களை வகைப்படுத்தியுள்ளனர். மனிதனுக்கு மட்டுமே ஆறறிவு என்று வகை படுத்தியுள்ளனர். ஆனால் அனைவரும் ஆறாம் அறிவு பகுத்தறிவுடன் செயல்படுகின்றோமா? என்றால் அதன் விடை ???. சரி தெரிந்து கொள்வோம், அறிவு வகைப்பாட்டினை...

Saturday, September 10, 2011

கணிதத்தில் π ன் வரலாறு

கணிதம் என்பது ஒரு மாமருந்து, ஒரு தேன் விருந்து, பருக பருக திகட்டாதது. இந்த கணிதத்தில் சுவையின் சுவை சேர்க்க பல சுருக்கக் குறியீட்டைப் பயன்படுத்துகிறோம். கணிதத்தில் ஆழமாக வேரூன்றி தழைத்து நிற்கும்  π என்ற கணிதக் குறீயீட்டின் வரலாற்றினைப் பற்றி பார்ப்போம்.

Monday, September 5, 2011

கணிதப் புதிர்களின் விடைகள் ( வழிமுறையுடன் )

கணிதப் புதிர்களை விடுவிப்பீர்களா....? என்று பதிவினை இட்டேன். கணிதத்தின் மேல் உள்ள பற்றால் RIPHNAS MOHAMED SALIHU விடா முயற்சியாக பதிலளித்ததற்கு மனமார்ந்த பாராட்டுக்கள். தங்களின் தன்னம்பிக்கை தெரிகிறது. முயற்சி செய்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் மிக்க நன்றி. இதோ புதிர்களின் விடைகள்.

Sunday, September 4, 2011

ஆசிரியர் தின வாழ்த்துக்கள்...


றிவை விதைப்பவர் ஆசிரியர்

சானாய் இருப்பவர் ஆசிரியர்

Sunday, August 21, 2011

தமிழர்களின் என்ணறிவு: பில்லியனுக்கும் மேல் தெரியுமா ?        நம்மில் பலருக்கு கோடி, மில்லியன், பில்லியன் அதற்கு மேல் தெரியாது. ஆனால் 2300 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் அனந்தம்

Friday, August 19, 2011

நனையாத உன் மடல்

                     குளிர்ந்த காற்று

                     நெகிழ்ந்த மேகம்

                     பொழிந்த தூறல்

                     சில்லிட்ட சாரல்

                     எதுவும் என்னைக் கவரவில்லை
          

Sunday, August 14, 2011

கணிதப்புதிர்கள் - புதிரை விடுவிப்பீர்களா ....?


1) கட்டியால் எட்டு கட்டி
    காலரை முக்கால் கட்டி
      செட்டியார் இறந்து போனார்
         சிறுபிள்ளை மூன்று பேர்
            கட்டியை உடைக்காமல்
                 கணக்காய் பிரித்திடுக...

Saturday, August 13, 2011

என் பிரியமான மகளே...
      
                    ன்னுடன் பிணக்குக்கொண்டு
                    பேசாதிருக்கும்
               என் பிரிய மகளே ....

Thursday, August 11, 2011

கணிதப்புதிர்கள் - விடைகள் (வழிமுறையுடன்)

1) ஒரு கடிகாரம் 5 முறை மணி அடிக்க 12 வினாடி ஆகிறது எனில் 10 முறை மணியடிக்க எத்தனை வினாடி
?

கடிகாரம் 5 முறை மணியடிக்க 12 வினாடி. எனவே 1 க்கும் 5 க்கும்  இடையில் 4 இடைவெளி உள்ளது. 4x3=12. ஒரு இடைவெளிக்கு 3 வினாடி. 1 க்கும் 10 க்கும் இடையில் 9 இடைவெளி உள்ளது. எனவே 10 முறை மணியடிக்க 9x3=27 வினாடி.


2) ஒவ்வொரு மூன்றடிக்கும் ஒரு தூண் வீதம் நடப்படுகிறது எனில் 30 அடி நீளமுள்ள தாழ்வாரத்திற்கு எத்தனை தூண்கள் தேவை ?

Sunday, August 7, 2011

கணிதப்புதிர்கள் - முடிந்தால் விடை கூறுங்கள்

1) ஒரு கடிகாரம் 5 முறை மணி அடிக்க 12 வினாடி ஆகிறது எனில் 10 முறை மணியடிக்க எத்தனை வினாடி?

27 விண்மீன்களின் தமிழ்ப்பெயர்கள்

                 
             கோள் என்பது, ஒன்றிலிருந்து ஒன்றை வாங்கி அடுத்தவருக்குத் தருவது என்ற பொருளில்தான் கோள் சொல்லுதல், கோள் மூட்டுதல் என்ற சொற்கள் வழக்கில் உள்ளது. ஒருவர் செய்தியை மற்றவருக்குத் தெரிவிப்பதே கோள் சொல்லுதல் எனப்படும். ஒன்றிலிருந்து ஒன்றைக் கொண்டு (ஒளியை) அதன் மூலம் வினையாற்றும் பொருளே கோள் எனப்பட்டது. கோள்கள் அனைத்தும் கதிரவனின் ஒளியைப் பெற்று உலகிற்கு எதிரொலிக்கின்றன.

Thursday, August 4, 2011

புத்தகம் உருவான வரலாறு


      நாம் படிக்கும், “புத்தகம்” என்ற இந்த வடிவம் பெற்றது பண்டைக் காலத்தின் பிற்பகுதியில்தான். இதற்கு முன் பாபிரஸ் (Papyrus) ரோல்களில்தான் எழுதப்பட்டு வந்தது. இது மிகவும் நீண்ட அளவிலான ரோல்களாகவும் இருந்தது. ரோமானியர்கள் இதனை வால்யுமின் (Valumen) என்றழைத்தனர். இதுவே பிறகு நாம் இன்று உபயோகிக்கும் வால்யூம் (Valume) என்ற பெயர் வரக் காரணமாக அமைந்தது.

Wednesday, August 3, 2011

மோனலிசா புன்னகையின் மர்மம்

மோனலிசாவின் புன்னகை மர்மமானது. கடந்த 500 ஆண்டுகளாக இந்த புன்னகையின் மர்மம புரியாத புதிராக இருந்து வந்தது. பிரான்ஸ் நாட்டின் புகழ் பெற்ற ஓவியர் லியனார்டோ டாவின்சி 1500 களில் வரைந்த அற்புத ஓவியம்தான் மோனலிசா.

Monday, August 1, 2011

சூரியனுக்கு 55 பெயர்கள்

சூரியன்தான் பூமியின் வாழ்வாதாரம். சூரியனைப் பற்றி சில பொதுவான தகவல்களைத் தெரிந்துக் கொள்ளலாம். சூரியன் ஏன் மஞ்சள் நிறமாகவும் காலை மாலையில் சிவப்பாகவும் தெரிவதன் காரணம் என்ன தெரியுமா? பொதுவாக சூரியன் விண்மீன் வகைபாட்டில் G2V வகையை சார்ந்ததாகும். G2 வகை விண்மீன்களின் மேற்பரப்பு வெப்பநிலை தோராயமா5,500°c ஆக இருப்பதால் வெண்மை நிறத்தில் ஒளி தரும். பூமிக்கு வந்து சூரிய ஒளியின் நிறமாலையில் உள்ள ஊதா மற்றும் நீல நிறங்களின் அலைநீளம் அதிகமாக இருப்பதனால் அவை ஒளிச்சிதறல் விளைவால் குறைக்கப்பட்டு மனிதக் கண்களுக்கு மஞ்சள் நிறமாகத் தெரிகிறது. இதே ஒளிச்சிதறல் விளைவாலே வானம் நீல நிறமாக இருக்கிறது. 

Sunday, July 31, 2011

பாண்டியனாக மாறிய சிவன்

சிவன் ஐவகை நிலங்களுக்கும் பொதுவான கடவுள் என்றும் அவர் தமிழ்க் கடவுள் என்றும் கருதுவோரும் உண்டு. சிவன் பொதிகை மலையிலிருந்து இமயம் வரை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தான் என்றும் ஒரு சாரர் கூறுகின்றனர்.

விருதுகளும் பரிசுகளும்1) நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர்   -  இரவீந்திரநாத் தாகூர்2) மகசாசே விருது பெற்ற முதல் இந்தியர்  -  ஆசார்யா வினோபா பாவே

Thursday, July 14, 2011

தமிழ்நாட்டின் சிறப்புகள்


1. தமிழக அரசு முத்திரையில் உள்ள கோபுரம் – ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்  கோபுரம்

2. தமிழகத்தின் நுழைவாயில்     - தூத்துக்குடி

Thursday, June 16, 2011

வட்டத்தின் சுற்றளவில் தமிழர்கள்


      கணிதம் உலகை மட்டுமல்ல அனைவரின் உள்ளதையும் ஆளும். ஈடுபாடு ஒன்று போதும். ஈடுபட்டால் கணிதமே உலகமாகும்.

      தமிழர் என்ற வகையிலே நாம் பெருமைப்பட்டுக்கொள்ளலாம். அதில் கணிதத்தைப் பொறுத்த மட்டில்,

Saturday, June 11, 2011

முரண்பாடு               அறியாமல் பிழை செய்திருந்தால்

               அடியேனை மன்னித்தருள்க.....

Friday, June 10, 2011

வட்டத்தின் பரப்பளவை முதலில் கண்டவர்கள் தமிழர்கள்கணித வரலாற்றில் தமிழருக்கு என்றும் முதன்மை இடம் உண்டு. வட்டதிற்கான பரப்பளவை முதலில் கண்டவர்கள் நாம் என்ற வகையில் பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.வட்டத்திற்கான பரப்பளவை காக்கைப்பாடினியம் என்ற தொன்மையான நூல் விளக்குகின்றது. தொல்காப்பியருக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த காக்கைப்பாடினியார். (தொல்காப்பியர் காலம் எனபது கி.மு.711 ஆகும்.) இவர் எழுதிய அற்புதமான கணித நூல் “ காக்கைப்பாடினியம் ஆகும். இதில் வட்டதிற்கான பரப்பளவை செய்யுள் வடிவில் கூறியுள்ளார்.

Wednesday, June 8, 2011

எண் வரிசைகளில் ஓர் அற்புதம் ! - II    கணிதத்தில் எண்களைப் பற்றி ஆராய்ந்தால் நாம் நம்மை அறியாமலேயே காற்றை மறந்து கணிதத்தை சுவாசிக்கக் கற்றுக்கொள்வோம். காதலிக்கக் கற்றுக்கொள்ளுங்கள், கன்னியை மட்டுமல்ல: கணிதத்தையும்தான். கணிதத்தில் ஆய்வை மேற்கொண்டவர்களுக்கு கடிகாரம் தேவையில்லை.  ஏனென்றால் காலம் அவர்களை கடந்து செல்லவில்லை. அவர்கள்தான் காலத்தை கடந்து சென்றுக் கொண்டிருக்கிறார்கள்.  அப்படியென்ன, கணிதத்தின் மேல் தீரா காதல், கீழ்கண்ட எண் தொடர்களை பாருங்கள். நீங்களும் கணிதத்தின் மேல் காதல் வயப்படுவீர்.


Tuesday, June 7, 2011

எண் வரிசைகளில் ஓர் அற்புதம் ! - I


"கணிதம் என்பது அறிவியலின் ராணி
 
எண் கணிதம்  என்பது கணிதத்தின் ராணி. "  - கார்ல் கௌஸ்
 

           
ஆம், எண்களில் ஒரு மாயை, ஒரு சக்தி, ஒரு விந்தை இருக்கிறது.  விந்தையான  பல எண்கள்  உள்ளன.  வியப்பூட்டும் அவ்வெண்களில் சிலவற்றை இங்கு ஈண்டு காண்போம்.

TYPE : 1
                      A!+B!+C! = ABC  என்ற வகையில் அமைந்த எண்கள்.
1,2,145,40585 ஆகிய எண்களை மட்டுமே அதன்  பேக்டோரியல்  எண்களின் கூடுதலாக எழுத முடியும்.

1) 145
      1! +4! + 5! = 1 + 24 + 120  = 145

Tuesday, May 31, 2011

காத்து... கருப்பு....           மக்களுக்கு இன்று வரை பேய் பிசாசுகள் பற்றி பயம் இருக்கத்தான் செய்கிறது. இன்று கூட இரவு நேரத்தில்  வெளியூர் பயணத்தை மேற்கொள்ளும் பொது, இப்போது வேண்டாம்; காத்து கருப்பு அடித்து விடும்; விடிந்த பின் போகலாம் என்பார்கள். 

அழகிய இளந்தளிரே .....
ஒற்றை நிமிடத்தில் உயிர் பிரியும்
ஒற்றை நொடியிலும் உனைப் பிரியேன்


எந்தன் நெஞ்சின் நாளத் துடிப்பும்
உந்தன் பெயர்தான் காதல் துடிப்பாம்


Tuesday, May 24, 2011

இந்தியாவில் முதன் முதலில்..... (மகளிர் மட்டும்)1. இந்தியாவில் முதன் முதலில் சுயேட்சையாக தேர்தலில் நின்று வெற்றிப்  பெற்ற முதல் இந்தியப் பெண்     -    Dr.S. முத்துலெட்சுமி ரெட்டி.

2. இந்தியாவின் முதல் பெண் முதலமைச்சர் - சுகேதா கிருபளானி ( உ.பி )

3. இந்தியாவின் முதல் பெண் அமைச்சர்    -    விஜயலட்சுமி பண்டிட்  ( உ.பி )

Saturday, May 21, 2011

பழந்தமிழரின் பன்னிரு மாதங்கள்
          தமிழர் பன்னெடுங்காலமாக பயன்படுத்தி வந்த தமிழ் மாதங்களின் பெயர்களைத் தற்போது மறந்து விட்டு ஆரியர்கள் கொண்டு வந்த பன்னிரு மாதங்களையே இன்று நாம் பின்பற்றி வருகிறோம்.  அதாவது சித்திரை முதல் பங்குனி வரை உள்ள மாதங்களை ஆரியர்கள் தான் கொண்டு வந்தார்கள்.   இன்று  தமிழக அரசு தை மாதத்தை தமிழர்களின் முதல் மாதமாக ஆணையிட்டு அறிவித்துள்ளது. தற்போதைய அரசு மறுபடியும்  சித்திரையையே கொண்டு வந்துவிட்டது.   இருப்பினும்  நாம் தை மாதத்தை சுறவம் என்ற மாதமாக தான் பின்பற்றி வந்தோம். ஆரியர்களின் புனர்தை என்பதில் தை என்ற ஈறு எழுத்தை மட்டும்  நமக்கு தந்துவிட்டனர். ஆரியர்களின் முதல் மாதம் சைத்திரா என்பதை தமிழரின் முதல் மாதம் சித்திரை என நம் மீது  திணித்துவிட்டனர். 

                 தமிழ் மாதங்களாக மாற்றப்பட்ட ஆரிய மாதங்கள்

Wednesday, May 18, 2011

பொன்னாங்கண்ணிக் கீரைக்கு 83 பெயர்கள்      இந்தியாவில் பல வகை கீரைகள் உணவாக உட்கொள்ளப்படுகின்றன. உணவிற்காக மட்டுமல்லாமல் மருத்துவப் பயன் கருதியும் கீரைகள் உண்ணப்படுகின்றன. அவற்றில் மிகவும் பெயர் பெற்றவை, அரைக்கீரை, தண்டு கீரை, புளிச்சைக்கீரை, வெந்தயக்கீரை, முருங்கைக் கீரை மற்றும் பொன்னாங்கண்ணி கீரை போன்றவையாகும்.

Tuesday, May 17, 2011

தமிழக முதல்வர்கள்           நாம்  சுதந்திரம் பெறுவதற்கு முன்பிலிருந்து இன்று வரை அதாவது தமிழகத்தின் முதல் முதலைமைச்சர் முதல் இன்றுவரை உள்ள  மாண்புமிகு  முதலமைச்சர்களின் பட்டியல் இதோ !

Monday, May 16, 2011

தமிழக புதிய அமைச்சர்கள்


                

              தமிழக முதல்வராக மூன்றாவது முறையாக, அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா இன்று (16 .05 .2011 ) பகல், 12.15 மணிக்கு, சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு அரங்கில் பதவி ஏற்கிறார். நடந்து முடிந்த  தமிழக  சட்டசபை     பொதுத்  தேர்தலில்,  அ.தி.மு.க., 146  தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன், புதிய அரசை  அமைக்கிறது. இந்நிலையில் இன்று  பதவியேற்க உள்ள அமைச்சர்களின் பட்டியல் நேற்று மாலையிலேயே  வெளியிடப்பட்டது..[ஞாயிற்றுக்கிழமை, 15. மே. 2011, 04:45  PM ]தமிழக புதிய அமைச்சர்களின் பெயர் பட்டியல்:

 1. ஜெ. ஜெயலலிதா - முதல்வர்.
2. ஓ. பன்னீர்செல்வம் - நிதி அமைச்சர்.
3. கே.ஏ. செங்கோட்டையன் - விவசாயத்துறை அமைச்சர்.
4. நத்தம் ஆர். விஸ்வநாதன் - மின்சாரத்துறை அமைச்சர்.
5. கே.பி. முனுசாமி - உள்ளாட்சித்துறை அமைச்சர்.
6. சி. சண்முகவேலு - தொழில்துறை அமைச்சர்.
7. ஆர். வைத்திலிங்கம் - வீட்டுவசதித்துறை அமைச்சர்.
8. அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி - உணவுத்துறை அமைச்சர்.
9. சி. கருப்பசாமி - பால் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர்.
10. பி. பழனியப்பன் - உயர்கல்வித்துறை அமைச்சர்.
11. சி.வி. சண்முகம் - பள்ளிகல்வித்துறை அமைச்சர்.
12. செல்லூர் கே. ராஜு - கூட்டுறவுத்துறை அமைச்சர்.
13. கே.டி. பச்சமால் - வனத்துறை அமைச்சர்.
14. எடப்பாடி கே. பழனிசாமி - நெடுஞ்சாலைத்துறை அமைச்சர்.
15. எஸ்.பி. சண்முகநாதன் - இந்து அறநிலையத்துறை அமைச்சர்.
16. கே.வி. ராமலிங்கம் - பொதுப்பணித்துறை அமைச்சர்.
17. எஸ்.பி. வேலுமணி - சிறப்புத் திட்டத்துறை அமைச்சர்.
18. டி.கே.எம். சின்னையா - பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்.
19. எம்.சி. சம்பத் - ஊரக தொழில்துறை அமைச்சர்.
20. பி. தங்கமணி - வருவாய்த்துறை அமைச்சர்.
21. ஜி. செந்தமிழன் - செய்தித்துறை அமைச்சர்.
22. எஸ். கோகுல இந்திரா - வணிக வரித்துறை அமைச்சர்.
23. செல்வி ராமஜெயம் - சமூகநலத்துறை அமைச்சர்.
24. பி.வி. ராமண்ணா - கைத்தறி, ஜவுளித்துறை அமைச்சர்.
25. ஆர்.பி. உதயகுமார் - தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர்.
26. என். சுப்பிரமணியன் - ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர்.
27. வி. செந்தில் பாலாஜி - போக்குவரத்துத்துறை அமைச்சர்.
28. என். மரியம் பிச்சை - சுற்றுச்சூழல் அமைச்சர்.
29. கே.ஏ. ஜெயபால் - மீன்வளத்துறை அமைச்சர்.
30. இ. சுப்பையா - சட்டத்துறை அமைச்சர்.
31. புதிசந்திரன் - சுற்றுலாத்துறை அமைச்சர்.
32. எஸ்.டி. செல்லபாண்டியன் - தொழிலாளர் நலத்துறை அமைச்சர்.
33. வி.எஸ். விஜய் - சுகாதாரத்துறை அமைச்சர்.
34. என்.ஆர். சிவபதி - விளையாட்டுத்துறை அமைச்சர்.


Sunday, May 15, 2011

வைணவத்தில் வடகலை மற்றும் தென்கலை


இராமானுஜர் காலத்தில் வைணவம் புத்துணர்வுப் பெற்றது. இராமானுஜர் காலத்திற்குப் பிறகு வைணவர்களிடையே வடகலை மற்றும் தென்கலை வைணவர்கள் என்ற இரு பிரிவுகள் தோன்றின. வேங்கட நாதர் என்ற வேதாந்த தேசிகர் என்பார் காஞ்சிபுரத்திற்கு அருகில் துப்பில் எனும் கிராமத்தில் பிறந்தார். பதின்மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றிய இவர் வைணவர்களிடையே வடகலை எனும் பிரிவு தோன்றக் காரணமாக இருந்தார். ஏறத்தாழ அதே காலக்கட்டத்தில் ஆழ்வார் திருநகரியில் தோன்றிய மணவாள மகாமுனி என்பார் தென்கலை எனும் பிரிவு தோன்றக் காரணமாக இருந்தார்.

Thursday, May 12, 2011

ஆவி உலகின் தோற்றம்


   
      ஆரம்ப காலத்தில் மனிதர்கள் கூட்டமாய், குலமாய் வாழ்ந்தனர். குலம் என்பது கணம் என்றழைக்கப்பட்டது. ஒவ்வொரு குலத்துக்கும் ஒரு தலைவன் இருந்தான். அவனை குலபதி, கணபதி என்றழைத்தனர்.

Wednesday, May 11, 2011

உலகத்தின் முக்கிய எல்லைக் கோடுகள்

 
1. இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான எல்லைக்கோடு 
   
  ரெட்கிளிப் எல்லைக்கோடு.

2. இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையேயான எல்லைக்கோடு  

   மக்மோகன்  எல்லைக்கோடு.