Followers

Sunday, August 14, 2011

கணிதப்புதிர்கள் - புதிரை விடுவிப்பீர்களா ....?






1) கட்டியால் எட்டு கட்டி
    காலரை முக்கால் கட்டி
      செட்டியார் இறந்து போனார்
         சிறுபிள்ளை மூன்று பேர்
            கட்டியை உடைக்காமல்
                 கணக்காய் பிரித்திடுக...


(எத்தனை கால், அரை, முக்கால் கட்டிகள் உள்ளன என்பதை கண்டறிந்தால் எளிதாய் பிரித்திடலாம் )


2) ஒருநாள் தன் கணவனுடன் சண்டையிட்டுக் கொண்டுக்  கோபத்துடன் வீட்டை விட்டு வெளியேறிய மனைவி நாள் ஒன்றுக்கு ஒரு காதம் (10 மைல்) வீதம் நடந்து செல்கிறாள். ஏழு நாட்களுக்குப் பிறகு கணவன் அவளைத் தொடர்ந்து, புறப்பட்டு நாளொன்றுக்கு ஒன்றரை காதம் வீதம் நடந்து சென்றான். அவ்விருவரும் எப்போது சந்திப்பார்கள் ?  இருவரும் நடந்த தூரம் எவ்வளவு ?


3) ஒரு பையில் 175 காசுகள் உள்ளன. அவை ரூ.1, 50 காசு, 25 காசுகளாக உள்ளன. அவை ஒரே மாதிரியான தொகையைக் கொடுக்கக் கூடியன. பையில் எத்தனை எத்தனை காசுகள் இருந்தன ? பையிலிருந்த மொத்த பணம் எவ்வளவு ?   


4) ஒரு காய்கறி கடைக்காரர் 40 கிலோ எடை கொண்ட காய்களை வைத்திருக்கிறார். அவர் வைத்துள்ள எடைக்கற்கள் நான்கு. அவரிடம் யார் வந்து எவ்வளவு எடை ( 40 கிலோ மற்றும் அதற்குள் ) கேட்டாலும் எடைப்போட்டுத் தருகிறார். எடை அளவு பின்னங்களில் இல்லையெனில் கற்களின் எடை யாது ?


5) ஒருவர் முட்டைகளை தட்டுகளில் அடுக்கி, சைக்கிளில் வைத்து எடுத்து செல்லும் பொது எதிரே வேகமாக வந்த ஆட்டோ அவர் சைக்கிளை லேசாக மோதி தள்ளிவிட்டுச் சென்றது. இதனால் சைக்கிள் பின்னால் கட்டி வைக்கப்பட்டிருந்த முட்டைகள் சரிந்து விழுந்ததில் பல முட்டைகள் உடைந்து விட்டன. உடையாமல் எஞ்சிய முட்டைகளை எடுத்து எண்ணிப்பார்த்து உடைந்த முட்டைகள் எவ்வளவு என்று கணக்கிட்டுப்பார்த்தான்.

      உடைந்த முட்டைகளின் எண்ணிக்கையை 2,3,4,5,6 ஆல் வகுக்க 1 மீதியும், 7 ஆல் வகுக்க மீதமின்றியும் இருக்கக்கூடிய ஒரு சிறிய எண்ணாக இருந்தது.  உடையாமல் எஞ்சிய முட்டைகளின் எண்ணிக்கையை 2 ஆல் வகுக்க 1 மீதியும், 3 ஆல் வகுக்க 2 மீதியும், 4 ஆல் வகுக்க 3 மீதியும், 5 ஆல் வகுக்க 4 மீதியும், 6 ஆல் வகுக்க 5 மீதியும் கிடைத்தன. ஆனால் இதுவும் 7 ஆல் மீதமின்றி வகுப்பட்டது எனில் உடைந்த முட்டைகள் எவ்வளவு? உடையாத முட்டைகள் எவ்வளவு?


6) இருமடி மூலம் மற்றும் மும்மடி மூலம் காணும் மிகச் சிறிய எண் 64. ( 64 ன் வர்க்கமூலம் 8, 64 ன் மும்மடி மூலம் 4) எனில் இவ்வாறு உள்ள அதற்கு அடுத்த எண் எது ?


7) 3 என்ற எண்ணை 5 முறை பயன்படுத்தி மொத்த கூடுதல் 31 என்று வர வேண்டும். (+,-,x , ÷  எதை வேண்டுமாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் )


8) 1 லிருந்து 10 வரை அனைத்து எண்களையும் பயன்படுத்தி மொத்த கூடுதல் 100 என வர வேண்டும் எனில் அத்தொடரைக் காண்க.


9) 6 என்ற எண்ணின் எல்லா வகு (1,2,3,6) எண்களின் கூடுதல் ( 6 ஐத் தவிர்த்து ) (1 + 2 + 3 = ) 6 என்ற அதே எண்.  இவ்வாறு அமைந்த அடுத்த எண்ணைக் காண்க.


10) ஒரு எண்ணை, இரு எண்களின் மும்மடி ( Cube ) களின் கூட்டுத்தொகையாக, இரு வேறு விதமாக எழுதலாம். இவ்வாறு அமைந்த மிகச் சிறிய எண் எது ?  [ N =  A+ B3   =  C3 + D3  ]



15 comments:

  1. 1- 1/4 கட்டி, 2 nos
    1/2 கட்டி, 2 nos
    3/4 கட்டி, 4 nos
    இருவருக்கு 3/4 கட்டிகளில் இரண்டும் மற்றையவருக்கு 1/4 கட்டியில் இரண்டும் 1/2 கட்டியில் இரண்டும்.

    2- மனைவி புறப்பட்டு 21 நாட்களில் சந்திப்பார்கள். இருவரும் நடந்த தூரம் 210 மைல்ஸ்.

    3- 1 rupee - 25 nos, 50 cents-50 nos, 25 cents- 100 nos. Total amount = 75 rupees.

    sorry, now no time for other questions.. i'l come tonight...

    ReplyDelete
  2. ஆகா..., Ok I will wait for your all answers.
    Thank you.

    ReplyDelete
  3. கணக்கா... மீ எஸ்கேப்பு...

    ReplyDelete
  4. உங்கள் திறமைக்கும், ஆர்வத்திற்கும் நல்வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  5. 4 - difficult
    5 - BROKEN EGGS- 301
    UNBROKEN - 119

    6 - 729
    OTHER QUISTIONS ARE SOMEWHAT DIFFICULT NO.. NEED A LOT OF TIME.. I'L TRY THEM LATER..

    ReplyDelete
  6. //பாரத்... பாரதி... said...
    உங்கள் திறமைக்கும், ஆர்வத்திற்கும் நல்வாழ்த்துக்கள்..//

    வாழ்த்துக்கு நன்றி தோழி...

    ReplyDelete
  7. // RIPHNAS MOHAMED SALIHU said...

    OTHER QUISTIONS ARE SOMEWHAT DIFFICULT NO.. NEED A LOT OF TIME.. I'L TRY THEM LATER...//

    முயற்சி திருவினையாக்கும்... வாழ்த்துக்கள் தோழி.

    ReplyDelete
  8. ஒரு நிறையை அளப்பதற்கு ஒரே எடைக் கல்லை ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் பயன்படுத்தலாமா?

    ReplyDelete
  9. //RIPHNAS MOHAMED SALIHU said...
    ஒரு நிறையை அளப்பதற்கு ஒரே எடைக் கல்லை ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் பயன்படுத்தலாமா?//

    மன்னிக்கவும் தோழி. வாய்ப்பில்லை.

    ReplyDelete
  10. 7 - 3^3 +3 +(3/3) = 31

    wil try others later..

    ReplyDelete
  11. அன்புள்ள நண்பருக்கு உங்களின் வலைப்பூவிற்கு நான் ரசிகனாகிவிட்டேன் மிக மிக அழககா மட்டுமின்றி அறிவுத்தகவல்கள் கொட்டி கிடக்கிறது .உங்களின் கடின முயற்ச்சிக்கு வாழ்துகள்

    ReplyDelete
  12. //அ.குரு said...
    அன்புள்ள நண்பருக்கு உங்களின் வலைப்பூவிற்கு நான் ரசிகனாகிவிட்டேன் மிக மிக அழககா மட்டுமின்றி அறிவுத்தகவல்கள் கொட்டி கிடக்கிறது .உங்களின் கடின முயற்ச்சிக்கு வாழ்துகள்// உங்களின் கருத்துக்கள் என்னை மேலும் ஊக்கப்படுத்தும். நன்றி நண்பரே...

    ReplyDelete
  13. nice blogspot.

    ReplyDelete