Followers

Thursday, June 16, 2011

வட்டத்தின் சுற்றளவில் தமிழர்கள்


      கணிதம் உலகை மட்டுமல்ல அனைவரின் உள்ளதையும் ஆளும். ஈடுபாடு ஒன்று போதும். ஈடுபட்டால் கணிதமே உலகமாகும்.

      தமிழர் என்ற வகையிலே நாம் பெருமைப்பட்டுக்கொள்ளலாம். அதில் கணிதத்தைப் பொறுத்த மட்டில்,

Saturday, June 11, 2011

முரண்பாடு



               அறியாமல் பிழை செய்திருந்தால்

               அடியேனை மன்னித்தருள்க.....

Friday, June 10, 2011

வட்டத்தின் பரப்பளவை முதலில் கண்டவர்கள் தமிழர்கள்



கணித வரலாற்றில் தமிழருக்கு என்றும் முதன்மை இடம் உண்டு. வட்டதிற்கான பரப்பளவை முதலில் கண்டவர்கள் நாம் என்ற வகையில் பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.வட்டத்திற்கான பரப்பளவை காக்கைப்பாடினியம் என்ற தொன்மையான நூல் விளக்குகின்றது. தொல்காப்பியருக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த காக்கைப்பாடினியார். (தொல்காப்பியர் காலம் எனபது கி.மு.711 ஆகும்.) இவர் எழுதிய அற்புதமான கணித நூல் “ காக்கைப்பாடினியம் ஆகும். இதில் வட்டதிற்கான பரப்பளவை செய்யுள் வடிவில் கூறியுள்ளார்.

Wednesday, June 8, 2011

எண் வரிசைகளில் ஓர் அற்புதம் ! - II



    கணிதத்தில் எண்களைப் பற்றி ஆராய்ந்தால் நாம் நம்மை அறியாமலேயே காற்றை மறந்து கணிதத்தை சுவாசிக்கக் கற்றுக்கொள்வோம். காதலிக்கக் கற்றுக்கொள்ளுங்கள், கன்னியை மட்டுமல்ல: கணிதத்தையும்தான். கணிதத்தில் ஆய்வை மேற்கொண்டவர்களுக்கு கடிகாரம் தேவையில்லை.  ஏனென்றால் காலம் அவர்களை கடந்து செல்லவில்லை. அவர்கள்தான் காலத்தை கடந்து சென்றுக் கொண்டிருக்கிறார்கள்.  அப்படியென்ன, கணிதத்தின் மேல் தீரா காதல், கீழ்கண்ட எண் தொடர்களை பாருங்கள். நீங்களும் கணிதத்தின் மேல் காதல் வயப்படுவீர்.


Tuesday, June 7, 2011

எண் வரிசைகளில் ஓர் அற்புதம் ! - I


"கணிதம் என்பது அறிவியலின் ராணி
 
எண் கணிதம்  என்பது கணிதத்தின் ராணி. "  - கார்ல் கௌஸ்
 

           
ஆம், எண்களில் ஒரு மாயை, ஒரு சக்தி, ஒரு விந்தை இருக்கிறது.  விந்தையான  பல எண்கள்  உள்ளன.  வியப்பூட்டும் அவ்வெண்களில் சிலவற்றை இங்கு ஈண்டு காண்போம்.

TYPE : 1
                      A!+B!+C! = ABC  என்ற வகையில் அமைந்த எண்கள்.
1,2,145,40585 ஆகிய எண்களை மட்டுமே அதன்  பேக்டோரியல்  எண்களின் கூடுதலாக எழுத முடியும்.

1) 145
      1! +4! + 5! = 1 + 24 + 120  = 145