Followers

Monday, August 1, 2011

சூரியனுக்கு 55 பெயர்கள்





சூரியன்தான் பூமியின் வாழ்வாதாரம். சூரியனைப் பற்றி சில பொதுவான தகவல்களைத் தெரிந்துக் கொள்ளலாம். சூரியன் ஏன் மஞ்சள் நிறமாகவும் காலை மாலையில் சிவப்பாகவும் தெரிவதன் காரணம் என்ன தெரியுமா? பொதுவாக சூரியன் விண்மீன் வகைபாட்டில் G2V வகையை சார்ந்ததாகும். G2 வகை விண்மீன்களின் மேற்பரப்பு வெப்பநிலை தோராயமா5,500°c ஆக இருப்பதால் வெண்மை நிறத்தில் ஒளி தரும். பூமிக்கு வந்து சூரிய ஒளியின் நிறமாலையில் உள்ள ஊதா மற்றும் நீல நிறங்களின் அலைநீளம் அதிகமாக இருப்பதனால் அவை ஒளிச்சிதறல் விளைவால் குறைக்கப்பட்டு மனிதக் கண்களுக்கு மஞ்சள் நிறமாகத் தெரிகிறது. இதே ஒளிச்சிதறல் விளைவாலே வானம் நீல நிறமாக இருக்கிறது. 


உண்மையில் அண்டவெளி கருமை நிறத்தினைக் கொண்டது. சூரியன் பூமியில் மறையும் தருவாயில் குறுகிய அலை நெடுக்கத்தைக் கொண்ட சிவப்பு நிறம் ஒளிச்சிதறல் விளைவால் சூரியனை செம்மஞ்சள் நிறமாகவோ அல்லது சிவப்பு  நிறமாகவோ காட்டுகிறது.     இத்தகைய சூரியனைப் பற்றி நம் தமிழ் நாட்டில் இதுவரை வழங்கப்பட்ட வழக்கில் இருந்த தமிழிலும் வடமொழியிலும் கலந்து சொல்லப்பட்டுள்ள சூரியனின் வேறு பெயர்களைப் பற்றித் தெரிந்துக்கொள்வோம். அவை பின்வருமாறு.

1) அகில சாட்சி
     2) அண்டயோனி
     3) அரியமா
     4) அரிகிரணன்
     5) அருக்கன்
     6) அருணன்
     7) அலரி
     8) அழலவன்
     9) அனலி
     10) ஆதவன்
11) ஆதித்தன்
     12) ஆயிரஞ்சோதி
     13) இரவி
     14) இருள் வலி
     15) இனன்
     16) உதயன்
     17) எல்
     18) எல்லை
     19) ஏழ்பரியோன்
     20) ஒளியோன்
     21) கதிரவன்
     22) கன்ஒளி
     23) கனலி
     24) சண்டன்
     25) சித்திரபானு
     26) சுடரோன்
     27) சூரன்
     28) சூரியன்
     29) செங்கதிரோன்
     30) சோதி
31) ஞாயிறு
32) தபனன்
33) தரணி சான்றோன்
34) திவாகரன்
35) தினகரன்
36) தினமணி
     37) நபோமணி
     38) பகல்
     39) பகலோன்
     40) பங்கயன்
     41) பதங்கன்
     42) பரிதி
     43) பருக்கன்
     44) பனிப்பகை
45) பானு
46) மார்த்தாண்டன்
     47) மித்திரன்
     48) மாலி
     49) விகத்தன்
     50) விண்மணி
     51) விரிச்சி
     52) விரோசனன்
     53) வெஞ்சுடர்
     54) வெய்யோன்
     55) வெயில்


No comments:

Post a Comment