Followers

Wednesday, August 3, 2011

மோனலிசா புன்னகையின் மர்மம்





மோனலிசாவின் புன்னகை மர்மமானது. கடந்த 500 ஆண்டுகளாக இந்த புன்னகையின் மர்மம புரியாத புதிராக இருந்து வந்தது. பிரான்ஸ் நாட்டின் புகழ் பெற்ற ஓவியர் லியனார்டோ டாவின்சி 1500 களில் வரைந்த அற்புத ஓவியம்தான் மோனலிசா.


இந்த ஓவியம் ஐந்து நூற்றாண்டுகளாக உலகம் முழுதும் பேசப்படுவதாக அமைந்துள்ளது. இதற்கு காரணம் மோனலிசாவின் புன்னகை மர்மம். மோனலிசாவின் முகத்தை நேரடியாக பார்க்கும் பொது புன்னகைப்பது தெரியாது. ஆனால் ஓவியத்திலிருந்து சற்று பார்வையை விலக்கினால் அந்த புன்னகை புலப்படும். இந்த மர்மதிற்கு அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழக பேராசிரியர் மார்கரெட் லிவிங்ஸ்டன் விடை கண்டுள்ளார். அறிவியல் முன்னேற்றத்திற்கான அமரிக்க சங்கத்தின் ஆண்டு கூட்டத்தில் அவர் தனது ஆய்வை சமர்பித்தார்.



மோனலிசாவின் ஓவியத்தை உற்றுப்பார்க்கும் போது அதன் புன்னகை மறைவதற்கு நம் கண்களின் பார்வைதான் காரணம் என அவர் கூறுகிறார்.

நம் கண்களுக்கு இரு விதமான பார்வைகள் உண்டு. அவை நேர்பார்வை மற்றும் ஓரப்பார்வை. நாம் பெரும்பாலும் நேர்பார்வையைத்தான் பயன்படுத்துகிறோம். ஓரப் பார்வை குறைவுதான். மோனலிசாவின் புன்னகை கிட்டத்தட்ட முற்றிலும் கீழ் பகுதியில் நிகழ்கிறது. எனவே ஓரப் பார்வையில் தான் அது புலப்படும் என்கிறார் மார்கரெட்.

உதாரணமாக, அச்சடிக்கப்பட்ட ஒரு பக்கத்தில் உள்ள ஒரு எழுத்தை மட்டும் கூர்மையாக பார்த்தால், அந்த குறிப்பிட்ட எழுத்துக்கு வெகு அருகில் உள்ள மற்ற எழுத்துக்கள் கூட என்னவென்று தெரியாது.

  இந்த கோட்பாடுதான் டாவின்சியின் ஓவியத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.


மோனலிசாவின் கண்களையோ அவளது முகத்தின் வேறு பகுதிகளையோ பார்க்கும் போது அந்த புன்னகை நமக்கு புலப்படாது. டாவின்சி மட்டுமல்ல, சுக்குளோஸ், ராபர்ட் சில்வர்ஸ் உள்ளிட்ட பல ஓவியர்கள் மனித பார்வையின் தன்மைகளை அந்த காலத்திலேயே உணர்ந்துள்ளனர். விஞ்ஞானிகள் இப்போதுதான் கண்டுபிடிக்கின்றனர் என்கிறார் மார்கரெட்.  

5 comments:

  1. மர்மமான புன்னகைதான் பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  2. தங்கள் வருகைக்கு மிக்க நன்றி, கோகுல் அவர்களே...

    ReplyDelete
  3. வருகைப் புரிந்த தமிழ்த்தோட்டதிற்கு நன்றி.

    ReplyDelete