Followers

Saturday, August 13, 2011

என் பிரியமான மகளே...




      
                    ன்னுடன் பிணக்குக்கொண்டு
                    பேசாதிருக்கும்
               என் பிரிய மகளே ....



           ந்தத்தாலும் சொந்தத்தாலும்
                    பாசத்தாலும் வேசத்தாலும்
                    ரணப்பட்டு ரணப்பட்டுத்
                    துடிக்கும் போதெல்லாம்
                    வலிக்காத மனசு...
               ஏனோ....
                    நீ பேசாமல் இருக்கும்போது
                    வலிக்குதடி என் மனசு....


           தோழியாய் என் மகளாய்
               தோன்றிய மகத்துவம் நீ...
               இதயத்தில் உறங்கும்
               என் இமயமும் நீ....


                    லையாய் வந்து
                    அழிக்கும் சுனாமி
                    அழைக்காமல் இருந்து
                    அலைக்கழிக்கும்
                    சுனாமியின் பினாமிதான்
                    உந்தன் மௌனமா....


                ல்லுக்குள் உறங்கும் சிற்பம்
                கண்களுக்குத் தெரியாது
                எனக்குள் உயிர்ப்பிக்கும்
                உந்தன் நினைவுக்கு
                எப்படி தெரியாதிருந்தது....?
                என் உயிருக்குள் உறங்குபவள் நீதானென்று...


           வானத்தின் மழை
               பூமியின் பூகம்பம்
               கடலின் சுனாமி
               காற்றின் சூறாவளி
               இவையனைத்தும் ஒன்றானது...
               நீ பேசாதிருக்கும் போது....

            
           ரோஜா செடியில்
               முட்கள்தான்...
               நீ ரோஜாவாக இருக்கும்போது
               என் வாழ்கையில்
               முட்கள் தெரிவதில்லை....  -  ஆனால்
               ஏனோ பூக்க மறுக்கிறாய்
               என்னில் பேச மறுக்கிறாய்...


           என் எண்ணத்திலிருக்கும்
               உன்னிடத்தில் – பல
               வண்ணத்தில் பேசும் போது  - என்
               கன்னத்தில் வழிந்தோடும் நீருக்கு
               என்ன பதில்....?


                     நுரையீரலில் குடிக்கொண்டு
                     என் இதயத்தை ஆட்டிப்படைக்கும்
                     என் இனிய மகளே ....
                     இனிமேலாவது செப்புக...
                     மௌனத்தின் பதிலை...
                     இல்லையேல்...
                     மௌனமாகவே மாறிவிடலாம்,
                     என் வாழ்கையும் கூட ....
     

2 comments:

  1. மகளின் பாசத்தை மறுபடி மீட்கப் போராடிப் பரிதவிக்கும் பெற்ற மனதை அழகாகப் பதிவு செய்கிறது கவிதை!

    ReplyDelete
  2. தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி கீதா அவர்களே....

    ReplyDelete