Followers

Monday, October 14, 2013

நேரத்தின் மதிப்பு தெரியுமா...?




    “நேரத்தை வீணாக்கும்போது கடிகாரத்தைப் பார்! 

  ஓடுவது முள் அல்ல, உன் வாழ்க்கை”.
                                   - சுவாமி விவேகானந்தர் 


1. பத்து ஆண்டுகளின் மதிப்பை சமீபத்தில் விவாகரத்து செய்த தம்பதிகளைக் கேளுங்கள்

2.  நான்கு ஆண்டுகளின் மதிப்பை ஒரு பட்டதாரியிடம் கேளுங்கள்

3. ஒரு ஆண்டின் மதிப்பு என்னவென்று தேர்வில் தோல்வி அடைந்த மாணவனைக் கேளுங்கள்.

4. ஒரு மாதத்தின் மதிப்பு என்னவென்று குறைப் பிரசவத்துக்கு ஆளான ஒரு தாயைக் கேளுங்கள்.

5. ஒரு வாரத்தின் மதிப்பை அறிய ஒரு வாரப் பத்திரிகையின் ஆசிரியரைக் கேளுங்கள்.

6. ஒரு நாளின் மதிப்பு என்னவென்று தெரிய, அன்று வேலை கிடைக்காமல் போன ஒரு தினக்கூலித் தொழிலாளியிடம் கேளுங்கள்.

7. ஒரு மணி நேரத்தின் மதிப்பு என்னவென்று ரயில் நிலையத்தில் சுற்றத்தாருக்காகக் காத்திருக்கும் மனிதரைக் கேளுங்கள்.

8. ஒரு நிமிடத்தின் மதிப்பை பேருந்தையோ, விமானத்தையோ, இரயிலையோ தவறவிட்ட பயணியிடம் கேளுங்கள்.

9. ஒரு விநாடியின் மதிப்பு என்னவென்று ஒரு விபத்தில் உயிர் தப்பியவரைக் கேளுங்கள்.

10. ஒரு மில்லி செகண்டின் மதிப்பு என்னவென்று ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றவரைக் கேளுங்கள்.


இன்றைய நேரம், மற்ற எல்லா நேரங்கள் போல்,
ஒரு இனிய நேரம் - அதை எப்படி உபயோகிக்க வேண்டும்
என்று தெரிந்திருந்தால்  - எமெர்சன்



காலத்தை கணக்கிட்டு வாழக்கற்றுக்கொள்ளுங்கள். 
வாழ்க்கை வளமாகும்.

2 comments:

  1. வணக்கம்
    நேரத்தைப்பற்றிய விளக்கத்துக்கு நல்ல எடுத்துக்காட்டுகள் வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. //2008rupan said...
    வணக்கம்
    நேரத்தைப்பற்றிய விளக்கத்துக்கு நல்ல எடுத்துக்காட்டுகள் வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-//

    தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரூபன்.

    ReplyDelete