கணித உலகின் ஓர் ஒப்பற்ற ஒளிவிளக்கு, கணித சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தி, எண்களின் இராணுவத் தளபதி, எண்ணில் அடங்காத எண்களின் தோழன். ஆம்! உலகம் போற்றும் கணிதத் தலைவன் ராமனுஜன். தமிழகத்தில் பிறந்து உலகினில் உயர்ந்த கணித மாமேதை. இவரின் பிறந்த நாளை முன்னிட்டு நம் பாரத பிரதமர் வரும் புத்தாண்டை (2012) கணித ஆண்டாக அறிவித்தார். இது ராமானுஜரால் கணிதத்திற்கு கிடைத்த பெருமை.
Wednesday, December 28, 2011
Wednesday, October 12, 2011
Monday, October 10, 2011
Sunday, October 9, 2011
Saturday, October 8, 2011
Thursday, October 6, 2011
Wednesday, October 5, 2011
Tuesday, October 4, 2011
திருக்குறள் – சில தெரியாத செய்திகள்
திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார். திருக்குறள் மொத்தம் 133 அதிகாரங்களும் 1330 குறட்பாக்களும் அறம், பொருள், இன்பம் என முப்பெரும் பிரிவுகளையும் உள்ளடக்கியது என்பது யாவரும் அறிந்தது. ஆனால் திருக்குறளைப் பற்றி சில தெரியாத செய்திகள் இதோ.....
1. ஓலைச்சுவடிகளில் இருந்த திருக்குறள் 1612 ஆம் ஆண்டு முதன் முதலில் அச்சிடப்பட்டது.
Monday, October 3, 2011
யாருக்கு எத்தனை அறிவு?
எத்தனை பெரிய மனிதருக்கு எத்தனை சிறிய மனமிருக்கு, எத்தனை சிறிய பறவைக்கு எத்தனை பெரிய மனமிருக்கு... என்று பாட தோன்றினாலும் நம் முன்னோர்கள் ஆறறிவு வரை உயிரினங்களை வகைப்படுத்தியுள்ளனர். மனிதனுக்கு மட்டுமே ஆறறிவு என்று வகை படுத்தியுள்ளனர். ஆனால் அனைவரும் ஆறாம் அறிவு பகுத்தறிவுடன் செயல்படுகின்றோமா? என்றால் அதன் விடை ???. சரி தெரிந்து கொள்வோம், அறிவு வகைப்பாட்டினை...
Saturday, September 10, 2011
Monday, September 5, 2011
Sunday, September 4, 2011
Sunday, August 21, 2011
தமிழர்களின் என்ணறிவு: பில்லியனுக்கும் மேல் தெரியுமா ?
Friday, August 19, 2011
Sunday, August 14, 2011
கணிதப்புதிர்கள் - புதிரை விடுவிப்பீர்களா ....?
Saturday, August 13, 2011
Thursday, August 11, 2011
கணிதப்புதிர்கள் - விடைகள் (வழிமுறையுடன்)
1) ஒரு கடிகாரம் 5 முறை மணி அடிக்க 12 வினாடி ஆகிறது எனில் 10 முறை மணியடிக்க எத்தனை வினாடி?
கடிகாரம் 5 முறை மணியடிக்க 12 வினாடி. எனவே 1 க்கும் 5 க்கும் இடையில் 4 இடைவெளி உள்ளது. 4x3=12. ஒரு இடைவெளிக்கு 3 வினாடி. 1 க்கும் 10 க்கும் இடையில் 9 இடைவெளி உள்ளது. எனவே 10 முறை மணியடிக்க 9x3=27 வினாடி.
2) ஒவ்வொரு மூன்றடிக்கும் ஒரு தூண் வீதம் நடப்படுகிறது எனில் 30 அடி நீளமுள்ள தாழ்வாரத்திற்கு எத்தனை தூண்கள் தேவை ?
Sunday, August 7, 2011
கணிதப்புதிர்கள் - முடிந்தால் விடை கூறுங்கள்
27 விண்மீன்களின் தமிழ்ப்பெயர்கள்
கோள் என்பது, ஒன்றிலிருந்து ஒன்றை வாங்கி அடுத்தவருக்குத் தருவது என்ற பொருளில்தான் கோள் சொல்லுதல், கோள் மூட்டுதல் என்ற சொற்கள் வழக்கில் உள்ளது. ஒருவர் செய்தியை மற்றவருக்குத் தெரிவிப்பதே கோள் சொல்லுதல் எனப்படும். ஒன்றிலிருந்து ஒன்றைக் கொண்டு (ஒளியை) அதன் மூலம் வினையாற்றும் பொருளே கோள் எனப்பட்டது. கோள்கள் அனைத்தும் கதிரவனின் ஒளியைப் பெற்று உலகிற்கு எதிரொலிக்கின்றன.
Thursday, August 4, 2011
புத்தகம் உருவான வரலாறு
நாம் படிக்கும், “புத்தகம்” என்ற இந்த வடிவம் பெற்றது பண்டைக் காலத்தின் பிற்பகுதியில்தான். இதற்கு முன் பாபிரஸ் (Papyrus) ரோல்களில்தான் எழுதப்பட்டு வந்தது. இது மிகவும் நீண்ட அளவிலான ரோல்களாகவும் இருந்தது. ரோமானியர்கள் இதனை வால்யுமின் (Valumen) என்றழைத்தனர். இதுவே பிறகு நாம் இன்று உபயோகிக்கும் வால்யூம் (Valume) என்ற பெயர் வரக் காரணமாக அமைந்தது.
Wednesday, August 3, 2011
Monday, August 1, 2011
சூரியனுக்கு 55 பெயர்கள்
சூரியன்தான் பூமியின் வாழ்வாதாரம். சூரியனைப் பற்றி சில பொதுவான தகவல்களைத் தெரிந்துக் கொள்ளலாம். சூரியன் ஏன் மஞ்சள் நிறமாகவும் காலை மாலையில் சிவப்பாகவும் தெரிவதன் காரணம் என்ன தெரியுமா? பொதுவாக சூரியன் விண்மீன் வகைபாட்டில் G2V வகையை சார்ந்ததாகும். G2 வகை விண்மீன்களின் மேற்பரப்பு வெப்பநிலை தோராயமாக 5,500°c ஆக இருப்பதால் வெண்மை நிறத்தில் ஒளி தரும். பூமிக்கு வந்து சூரிய ஒளியின் நிறமாலையில் உள்ள ஊதா மற்றும் நீல நிறங்களின் அலைநீளம் அதிகமாக இருப்பதனால் அவை ஒளிச்சிதறல் விளைவால் குறைக்கப்பட்டு மனிதக் கண்களுக்கு மஞ்சள் நிறமாகத் தெரிகிறது. இதே ஒளிச்சிதறல் விளைவாலே வானம் நீல நிறமாக இருக்கிறது.
Sunday, July 31, 2011
Thursday, July 14, 2011
Thursday, June 16, 2011
Saturday, June 11, 2011
Friday, June 10, 2011
வட்டத்தின் பரப்பளவை முதலில் கண்டவர்கள் தமிழர்கள்
கணித வரலாற்றில் தமிழருக்கு என்றும் முதன்மை இடம் உண்டு. வட்டதிற்கான பரப்பளவை முதலில் கண்டவர்கள் நாம் என்ற வகையில் பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.வட்டத்திற்கான பரப்பளவை காக்கைப்பாடினியம் என்ற தொன்மையான நூல் விளக்குகின்றது. தொல்காப்பியருக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த காக்கைப்பாடினியார். (தொல்காப்பியர் காலம் எனபது கி.மு.711 ஆகும்.) இவர் எழுதிய அற்புதமான கணித நூல் “ காக்கைப்பாடினியம்” ஆகும். இதில் வட்டதிற்கான பரப்பளவை செய்யுள் வடிவில் கூறியுள்ளார்.
Wednesday, June 8, 2011
எண் வரிசைகளில் ஓர் அற்புதம் ! - II
கணிதத்தில் எண்களைப் பற்றி ஆராய்ந்தால் நாம் நம்மை அறியாமலேயே காற்றை மறந்து கணிதத்தை சுவாசிக்கக் கற்றுக்கொள்வோம். காதலிக்கக் கற்றுக்கொள்ளுங்கள், கன்னியை மட்டுமல்ல: கணிதத்தையும்தான். கணிதத்தில் ஆய்வை மேற்கொண்டவர்களுக்கு கடிகாரம் தேவையில்லை. ஏனென்றால் காலம் அவர்களை கடந்து செல்லவில்லை. அவர்கள்தான் காலத்தை கடந்து சென்றுக் கொண்டிருக்கிறார்கள். அப்படியென்ன, கணிதத்தின் மேல் தீரா காதல், கீழ்கண்ட எண் தொடர்களை பாருங்கள். நீங்களும் கணிதத்தின் மேல் காதல் வயப்படுவீர்.
Tuesday, June 7, 2011
எண் வரிசைகளில் ஓர் அற்புதம் ! - I
"கணிதம் என்பது அறிவியலின் ராணி
எண் கணிதம் என்பது கணிதத்தின் ராணி. " - கார்ல் கௌஸ்
எண் கணிதம் என்பது கணிதத்தின் ராணி. " - கார்ல் கௌஸ்
ஆம், எண்களில் ஒரு மாயை, ஒரு சக்தி, ஒரு விந்தை இருக்கிறது. விந்தையான பல எண்கள் உள்ளன. வியப்பூட்டும் அவ்வெண்களில் சிலவற்றை இங்கு ஈண்டு காண்போம்.
TYPE : 1
A!+B!+C! = ABC என்ற வகையில் அமைந்த எண்கள்.
1,2,145,40585 ஆகிய எண்களை மட்டுமே அதன் பேக்டோரியல் எண்களின் கூடுதலாக எழுத முடியும்.
1) 145
1! +4! + 5! = 1 + 24 + 120 = 145
1! +4! + 5! = 1 + 24 + 120 = 145
Tuesday, May 31, 2011
Tuesday, May 24, 2011
Saturday, May 21, 2011
பழந்தமிழரின் பன்னிரு மாதங்கள்
தமிழர் பன்னெடுங்காலமாக பயன்படுத்தி வந்த தமிழ் மாதங்களின் பெயர்களைத் தற்போது மறந்து விட்டு ஆரியர்கள் கொண்டு வந்த பன்னிரு மாதங்களையே இன்று நாம் பின்பற்றி வருகிறோம். அதாவது சித்திரை முதல் பங்குனி வரை உள்ள மாதங்களை ஆரியர்கள் தான் கொண்டு வந்தார்கள். இன்று தமிழக அரசு தை மாதத்தை தமிழர்களின் முதல் மாதமாக ஆணையிட்டு அறிவித்துள்ளது. தற்போதைய அரசு மறுபடியும் சித்திரையையே கொண்டு வந்துவிட்டது. இருப்பினும் நாம் தை மாதத்தை சுறவம் என்ற மாதமாக தான் பின்பற்றி வந்தோம். ஆரியர்களின் புனர்தை என்பதில் தை என்ற ஈறு எழுத்தை மட்டும் நமக்கு தந்துவிட்டனர். ஆரியர்களின் முதல் மாதம் சைத்திரா என்பதை தமிழரின் முதல் மாதம் சித்திரை என நம் மீது திணித்துவிட்டனர்.
தமிழ் மாதங்களாக மாற்றப்பட்ட ஆரிய மாதங்கள்
Wednesday, May 18, 2011
Tuesday, May 17, 2011
Monday, May 16, 2011
தமிழக புதிய அமைச்சர்கள்
தமிழக முதல்வராக மூன்றாவது முறையாக, அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா இன்று (16 .05 .2011 ) பகல், 12.15 மணிக்கு, சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு அரங்கில் பதவி ஏற்கிறார். நடந்து முடிந்த தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில், அ.தி.மு.க., 146 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன், புதிய அரசை அமைக்கிறது. இந்நிலையில் இன்று பதவியேற்க உள்ள அமைச்சர்களின் பட்டியல் நேற்று மாலையிலேயே வெளியிடப்பட்டது..[ஞாயிற்றுக்கிழமை, 15. மே. 2011, 04:45 PM ]
|
Subscribe to:
Posts (Atom)