Followers

Wednesday, May 18, 2011

பொன்னாங்கண்ணிக் கீரைக்கு 83 பெயர்கள்



      இந்தியாவில் பல வகை கீரைகள் உணவாக உட்கொள்ளப்படுகின்றன. உணவிற்காக மட்டுமல்லாமல் மருத்துவப் பயன் கருதியும் கீரைகள் உண்ணப்படுகின்றன. அவற்றில் மிகவும் பெயர் பெற்றவை, அரைக்கீரை, தண்டு கீரை, புளிச்சைக்கீரை, வெந்தயக்கீரை, முருங்கைக் கீரை மற்றும் பொன்னாங்கண்ணி கீரை போன்றவையாகும்.
அகத்திக்கீரையில் புரதச்சத்தும் முருங்கைக்கீரையில் இரும்புச்சத்தும் மிகுதியாகக் காணப்படுகின்றன. பொன்னாங்கண்ணிக் கீரையில் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், புரதம், வைட்டமின்கள் ஏ, பி, சி போன்றவை உள்ளன. பொன்னாங்கண்ணிக்கீரை குளிர்ச்சியை தர வல்லது. இந்தக்கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களின் உடல் பொன்போல ஜொலிக்கும் என்பார்கள். அதனால்தான் இது பொன்னாங்கண்ணி என்று அழைக்கப்படுகிறது.

       இத்தைகையக்  கீரைகளை நம் வட்டார வழக்குகளில் பல பெயர்களில் அழைக்கிறோம். குறிப்பிட்டுச்  சொல்வேமேயானால் பொன்னாங்கண்ணிக்கு மட்டும் 83 பெயர்களைக் கொண்டு அழைக்கிறோம். இப்பெயர்கள் எல்லாம் இடைக்காலம் முதல் பிற்காலம் வரை நிலவிய சூழலில் வழங்கப்பட்ட பெயர்களாக இருக்க வாய்ப்புள்ளது. பொதுவாக இயற்கையோடு ஒன்றி வாழ்ந்த வேளாண்மைச் சமுதாயம் தன் இயல்பான சூழலில் மக்கள் பலரும் இத்தைகையப் பெயரிடும் வழக்கம் கொண்டிருக்கலாம். பொன்னாங்கண்ணிக்கு வழங்கப்படும் 83 பெயர்கள் இதோ!

  1. அண்டர் நிலை அலகு 
  2. அனுமான் சக்கா 
  3. அணுமாசக் கண்ணி 
  4. இந்திரானூரி 
  5. இந்திராணி காணி
  6. உடுக்காட்டி
  7. உம்பரூர் 
  8. உழவணிகச் செடி
  9. உழவணிகம்
  10. கடுஞ்சீ தளத்தி 
  11. கண்ணுக்கனி மூலம்
  12. கண்ணுக்கினியாள் 
  13. கரிப்பாலை
  14. கல்லுக்கலை  காத்தான்
  15. கல்லுக்கவைத்தளை 
  16. கற்பூரக்கண்ணி
  17. காணி
  18. காரியசித்தி
  19. காயசித்தி
  20. காளவடிவழகி
  21. கொடுப்பை
  22. சகச்சை
  23. சகாதேவி
  24. சிந்தாமணி
  25. சித்தமன்
  26. சித்தி
  27. சிதகி
  28. சிதசிக்கண்ணிச்செடி 
  29. சிதம்பூரம்
  30. சிதலிச்செடி 
  31. சிதளி 
  32. சீமைப்பொன்னாங்கண்ணி
  33. சீதளசக்தி 
  34. சீதளி 
  35. சீதனி
  36. சீதப்புறம் 
  37. சீதலிச்செடி
  38. சீதாபூரம்
  39. சீதேவி
  40. சீதேவிச்செடி
  41. சீதை
  42. சீரணிக்கண்ணிச்செடி
  43. சீரிணம்
  44. சுகதிர
  45. சுவாது வர்ணம்
  46. சூரைமான்
  47. சூரைமார்கண்ணி
  48. செங்கண்ணி
  49. செம்புசத்துமூலி
  50. சோமகண்ணி
  51. சோமவல்லரி
  52. தசமைக்கண்ணி 
  53. திரேகசித்தி
  54. தியாகக்கண்ணி
  55. தீயாக்கரை
  56. தேவரூர்
  57. நட்சத்திரத்தோன்றி
  58. நாட்டுப்பொன்னாங்கண்ணி
  59. நிரோவடி 
  60. நேத்திரநாசி
  61. பகல் நட்சத்திரத்தோன்றி
  62. பத்தூரம்
  63. பதுமாலயம்
  64. பித்தசாந்திபூனாற்கண்ணிக்கீரை
  65. பெருங்கொடுப்பை
  66. பொற்கண்ணி
  67. பொற்காணி
  68. பொன்காளி
  69. பொன்மூலி
  70. பொன்மேனி
  71. பொன்னாங்கண்ணி
  72. பௌதிக மங்கை
  73. மச்சாக்கி
  74. மச்சிக்கண்ணி
  75. மச்சியாத்தி
  76. மீனாட்சி
  77. மூசி
  78. மைசாட்சி
  79. வரிக்கண்ணி
  80. வத்தூரம்
  81. வாது வர்ணம்
  82. வானநாடி
  83. விண்ணுக்குள்  மூர்த்தி


5 comments: