Followers

Thursday, August 4, 2011

புத்தகம் உருவான வரலாறு






      நாம் படிக்கும், “புத்தகம்” என்ற இந்த வடிவம் பெற்றது பண்டைக் காலத்தின் பிற்பகுதியில்தான். இதற்கு முன் பாபிரஸ் (Papyrus) ரோல்களில்தான் எழுதப்பட்டு வந்தது. இது மிகவும் நீண்ட அளவிலான ரோல்களாகவும் இருந்தது. ரோமானியர்கள் இதனை வால்யுமின் (Valumen) என்றழைத்தனர். இதுவே பிறகு நாம் இன்று உபயோகிக்கும் வால்யூம் (Valume) என்ற பெயர் வரக் காரணமாக அமைந்தது.


      பிறகு ஐந்தாம் நூற்றாண்டின் மத்தியில் பாபிரஸ் ஆனது, பார்ச்மண்ட் ( Parchment ) மற்றும் வில்லேம் ( Vellum ) என்ற வகைகளின் வரவால் மறைந்து விட்டது. பார்ச்மெண்ட் என்பது செம்மறி ஆட்டின் தோலினால் செய்யப்பட்டது ஆகும். வில்லேம் என்பது கன்றுக்குட்டியின் தோலினால் செய்யப்பட்டது ஆகும். இவைகளில் ஒரு பக்கம் மட்டும் எழுதுவதற்குப் பயன்படுத்தி அதனை சரியாகக் கத்தரித்துச் சம அளவில் வைத்து ஒரு பக்கம் “பைண்டிங்” செய்து வைத்தனர். இதுவே (தைத்து) புத்தகம் வடிவம் பெறச் செய்த முதல் முயற்சியாகும்.

     மேலும், தோலினால் செய்யப்பட்ட துண்டுகளை மடித்து ஒவ்வொன்றும் இரண்டு பகுதிகளாக மடித்து வரும்படி செய்தனர். இப்படி நான்கு துண்டுகளை மடித்து ஒன்றனுள் ஒன்றாக வைத்து எட்டுப் பக்கங்களாக மாற்றினார். இதற்கு “செக்சன்” என்றும் பெயரிட்டனர்.  இப்படி எழுதப்பட்ட எட்டுப் பக்கங்கள் கொண்ட செக்சன்கள் அனைத்தையும் சரியாக ஒன்றன் மீது ஒன்று வைத்துப் பைண்டிங் செய்தனர். அதாவது இதனுடைய முதுகுப் பக்கத்தில் துளையிட்டு நூலினால் தைக்கப்பட்டுத் தோலினால் ஆன அட்டையிட்டு வடிவமைத்தனர். பிறகு இதில் பல மாற்றங்கள் செய்து அழகுப் படுத்திப் பத்திரப்படுத்தி வந்தனர்.

     இதுதான் புத்தகம் உருவான வரலாறு ஆகும். பிறகு பைபிள், சட்டம், சரித்திரம் மற்றும் மதப் புத்தகங்கள் ஆகிய பலதரப்பட்ட புத்தகங்கள்  வெளி வந்தன.


2 comments:

  1. தெரித்து கொள்ள வேண்டிய விஷயம்.

    ReplyDelete
  2. வாருங்கள் நண்பா...

    ReplyDelete