Followers

Sunday, August 7, 2011

கணிதப்புதிர்கள் - முடிந்தால் விடை கூறுங்கள்





1) ஒரு கடிகாரம் 5 முறை மணி அடிக்க 12 வினாடி ஆகிறது எனில் 10 முறை மணியடிக்க எத்தனை வினாடி?


2) ஒவ்வொரு மூன்றடிக்கும் ஒரு தூண் வீதம் நடப்படுகிறது எனில் 30 அடி நீளமுள்ள தாழ்வாரத்திற்கு எத்தனை தூண்கள் தேவை ?

3) ஒரு குளத்தில் உள்ள தாமரைப்பூ ஒவ்வொரு நாளும் தன்னுடைய மடங்கை இரட்டிப்பாக்கிக் கொண்டே செல்கிறது. 30 நாளில் அந்த குளம் முழுவதும் தாமரைப்பூக்களால் நிரம்பி வழிகிறது. எத்தனை நாட்களில் தாமரைப்பூக்கள்பாதி குளத்தை நிரப்பி இருக்கும் ?

4) பாதி நீரிலும், 1/12 பங்கு சேற்றிலும், 1/6 பங்கு மணலிலும் புதைந்திருக்கும் ஒரு கம்பம் 1 ½  முழம் வெளியே தெரிந்தால் அதன் நீளம் என்ன ?

5) இரண்டிலிருந்து ஆறு வரை எந்த எண்ணால் வகுத்தாலும் மீதி ஒன்று வரும். ஆனால் ஏழால் வகுத்தால் மீதி ஒன்று வராது. அந்த எண் என்ன ?

6) வானில் பறந்து செல்லும் பறவைக் கூட்டத்தைப் பார்த்து, மரத்தின் உச்சியில் அமர்ந்திருந்த ஒரு பறவைக்குஞ்சு கேட்டது, “நீங்கள் ஒரு நூறு பறவைகள் இருப்பீர்களா...? என்று கேட்டது. அதற்கு அந்த பறவைக் கூட்டதின் தலைமைப் பறவை சொன்னது, நாங்களும் எங்கள் இனத்தாரில் பாதியும் நீயும் சேர்ந்தால்தான் நூறு என்றது எனில் எத்தனை பறவைகள் வானில் பறந்து இருக்கும் ?
  
விடைகள்: எனது அடுத்த கணிதப் பதிவில்....

11 comments:

  1. 1-?
    2-9
    3-29நாட்கள்
    4-ஐந்தே கால் அடி.
    5-?
    6-66 பறவைகள்

    என் மூளை வேலை செய்த வரை இவ்வளவுதான் முடிந்தது.சரியா தப்பான்னு தெரியல.காத்திருக்கிறேன்

    ReplyDelete
  2. 1- 27 sec
    2- 11 posts
    3- 29 days
    4- கேள்வியில் ஒரு சின்னக் குழப்பம் இருப்பதாய்த் தெரிகிறது.பாதி நீரிலும் பாதி சேற்றிலும் இருந்தால் மிகுதி எங்கிருந்து வருவது? சேற்றில் இருப்பது 1/4 பங்கு என்றால் கம்பத்தின் மொத்த நீளம் 18 முழம்.
    5- 301
    6- 66 birds

    ReplyDelete
  3. வாருங்கள் கோகுல்: 3 & 6 சரியானது. வாழ்த்துக்கள் நண்பா.

    ReplyDelete
  4. வாருங்கள் RIPHNAS MOHAMED SALIHU: மிக்க நன்றி. //4- கேள்வியில் ஒரு சின்னக் குழப்பம் இருப்பதாய்த் தெரிகிறது.பாதி நீரிலும் பாதி சேற்றிலும் இருந்தால் மிகுதி எங்கிருந்து வருவது? //

    சேற்றில் இருப்பது 1/12 பங்கு. திருத்தம் செய்யப்பட்டுவிட்டது நண்பா. கண்டுபிடியுங்கள்... வாழ்த்துக்கள் நண்பா...

    ReplyDelete
  5. RIPHNAS MOHAMED SALIHU நண்பா...

    5 வது வினாவிற்கு மற்றொரு எண்ணும் உள்ளது.
    5 வினாக்களுக்கும் பதில் கண்டுபிடித்து விட்டீர்கள். மிக்க மகிழ்ச்சி நண்பா...

    ReplyDelete
  6. நல்ல முயற்சியை பயிற்சியாக அளித்தீர்கள் நண்பரே... நன்றி

    ReplyDelete
  7. 1. 60 sec
    2. 8 pillars (you should have mentioned howmany pillers are required minimum for 30 feet length. the answer can be any 10,9,8)
    3. 29 days
    4. 6 feet
    5. requires some time to calculate.. but the answer already posted
    6. 66 birds

    Thx
    Raja

    ReplyDelete
  8. 4- 6 ft.

    புதிர்கள் நன்றாக உள்ளது. எல்லாக் கேள்விகளுக்கும் சரியாகச் சொல்லி விட்டேன் என்று நினைக்கிறேன். என்ன பரிசு?? மற்றது, நண்பன் இல்லை .. நண்பி..

    ReplyDelete
  9. தோழி RIPHNAS MOHAMED SALIHU, கணக்கின் கடினத்திற்காக கொடுத்த 2 புதிர்களுக்கும் சரியான விடையை இவ்வளவு எளிதில் நீங்கள் தந்ததால் உண்மையில் மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் தோழி. உங்களுக்குப் பரிசாக அடுத்த 10 கணிதப்புதிர்களைத் தருகிறேன். வேறென்ன பரிசு தர, வானின் முழுமதியை தங்களுக்கு பரிசளிக்கிறேன், பெற்றுக் கொள்ளுங்கள். மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்கள் தோழி.

    ReplyDelete
  10. நன்றி நண்பனே.. உங்கள் பரிசு மிகப் பெறுமதியானது .. மற்றும் வித்தியாசமானது.

    ReplyDelete