உலகின் முதல் அறிவியல் வளர்ச்சியின் தொடக்கம் மனிதன், சக்கரத்தை கண்டுபிடித்ததே என்பது ஆய்வாளரின் கருத்து. சக்கரத்தைக் கண்டுபிடித்த இனம் யாவர் என்பது இது வரை உறுதி செய்யவில்லை. சக்கரம் என்ற பொருளில் சொல்லப்படும் பன்மொழிகளின் சொற்கள் தமிழின் மூலத்தையே கொண்டுள்ளன என்பதால் சக்கரத்தைக் கண்டுபிடித்தவன் தமிழனே என்று உறுதியாக கூறலாம்.
சருக்குதல் என்பதற்கு, வழுக்கிக்கொண்டு செல்லுதல் என்றும், வளைந்து செல்லுதல் என்றும் தமிழில் பொருளுண்டு.
சரு-சருமம் = மனித இனத்தின் மேல் தோல். (சருமம் வட சொல்லன்று )
சருமம் என்பதே சரீரம் என்று வடமொழியில் திரிந்தது.
சரு - சருக்கம் = வட்டமாக சுருட்டிக்கொல்லுதல்
சரு - சருகு = வட்டமாக சுருட்டிக்கொள்ளும் காய்ந்த இலை
சரு - சருகுனி = வளைந்து சுருட்டிகொள்ளும் உண்ணி
சரு - சருகட்டை = தனைத்தனே வட்டமாக சுருட்டிக்கொள்ளும் மரவட்டை
சருப்பம் - சர்ப்பம் = வட்டமாக சுருட்டிக்கொள்ளும் பாம்பு. (வடமொழியின் திரிபு )
சருப்பாம்பு என்பதே - சாரைப்பாம்பு என்றானது.
இவ்வாறு சருத்தல் சருக்குதல் என்ற தமிழ் மூலத்தில் பல சொற்கள் விரியும்.
சருக்கம் = வளைவு. வட்டமான வட்டை. சுற்று வட்டை.
ஆரம் = வட்டையின் வெளிப்புள்ளியும் நடுப்புள்ளியையும் இணைக்கும் கோடு.
ஆரம் = சக்கரத்தின் குறுக்கேயுள்ள ஆரக்கால்கள்.
சருக்கம் + ஆரம் = சருக்காரம் = ஒரு வட்டையினுள்ள ஆரக்கால்களையுடைய சக்கரம்.
சருக்காரம் என்பதே சர்க்கரம் - சக்கரம் என்று வழக்கில் வந்தது.
சருக்கல் என்பதற்கு வளைவு, வட்டம் என்பதே தமிழில் பொருளாகும்.
சருக்கல் - Circle என்று ஆங்கிலத்தில் திரிந்துள்ளதை நோக்குக.
Circle, Circlet, Circuit, Circular, Circulate, Circumference, Circus போன்ற ஆங்கிலச் சொற்களுக்கான மூலச்சொல், சருக்கல் என்ற தமிழ்ச்சொல்லே.
வில் - அரை வட்டமாக வளைந்த்துள்ள வில்.
வில் வண்டி - வளைந்த கூரையையுடைய வண்டி.
வில் - வில்லை - வட்டமான தகடு அல்லது கண்ணாடி .
வில் - வட்டமாக சுற்றி வளைத்துக்கொண்டு இடையூறு செய்வது.
வில் என்ற வட்டத்தைக் குறித்த தமிழ்ச் சொல்லே, Wheel என்று ஆங்கிலத்தில் திரிந்தது. Wheel = வட்டமான சக்கரம்.
உலக மொழிகளில் வட்டம், சக்கரம் என்ற சொற்கள் தமிழிலேயே முதலில் தோன்றின. சக்கரம் - சக்கரா என்று வடமொழியில் திரிந்தது. எனவே தமிழகத்தில் இருந்துதான் உலகத்தின் பல்வேறு பகுதிக்கும் சென்றது. ஆகவே தமிழர்தான் முதலில் சக்கரத்தைக் கண்டுபிடித்தார்கள் என்பதில் பெருமிதம் கொள்ளலாம்.
No comments:
Post a Comment