Followers

Monday, December 27, 2010

* சிவன் - ஓர் ஆய்வு


   
          உலகின் ஆதி காலத்தில் மக்கள் நாடோடி வாழ்க்கை முறையை மேற்கொண்டனர் என்பதை நாமறிவோம். அம்மக்கள் மரங்களிலேயே வாழ்ந்தார்கள் என்பதையும் நாமறிவோம். இரவு காலத்தில்   பயத்தின் காரணமாக, எப்போது விடியும் என்று காத்திருந்தனர்.
இரவு காலத்தின் ஒலிகளும் அசைவுகளும் மனிதனுக்கு பேரச்சத்தை உண்டாக்கின. செங்கதிரவன் தோன்றியதும் அவன் தனது அச்சத்தை மறந்தான் என்பதால், நாளும் கதிரவனை எதிர் நோக்கி நின்ற மனிதனுக்கு செங்கதிரவனே கடவுளாக தோன்றினான். சிவந்த நிறம் கொண்ட கதிரவனை சிவந்தவன் என்ற பொருளில் சிவன் என்றே அழைத்தனர். சிவ வணக்கம் என்பது இயற்கையின் பாற்பட்டது. இயற்கையோடு இணைந்தது.
     
              
விலங்குகளின் தாக்குதலிலிருந்து தப்ப நினைத்த மனிதர்கள்  இரவு நேரத்தில் மரங்களிலேயே குடியிருந்தனர். மரங்களிலும் இரவு காலங்களில் கேட்கப்பட்ட ஒலிகள், அசைவுகள் மக்களை அச்சதுக்குள்ளக்கியதால், தங்களுக்கு பாதுகாப்பாக இரவு காலங்களில், தங்களது கடவுளான சிவனை மரங்களிலேயே வந்து குடியிருக்குமாறு வேண்டிக்கொண்டான். மரங்களில் பெருமரங்களே முதல் மனிதர்கள் குடியிருந்த இடங்களாதலால், அப்பெருமரங்களிலேயே சிவனும் குடியிருப்பதாக எண்ணினர். ஆலமரம் மற்ற மரங்களைக் காட்டிலும் பெரிதாகவும், விரிந்து படர்ந்து விழுதுகளை இறக்கி நிலைப்பெற்றிருந்ததால், முதல் மனிதர்கள் தாங்கள் குடியிருந்த ஆலமரதிலேயே சிவனும் குடியிருப்பதாக எண்ணி  ஆலமரத்தையே சிவனுக்குரிய மரமாக கருதினர்.
            
            
ஆய் அண்டிரன் என்ற வள்ளல், அவனுக்குக் கிடைக்கப்பெற்ற அரிதான ஆடையை, ஆலமர் செல்வனுக்குச் சாத்தினான் என்று சிறுபாணாற்றுப்படை கூறுகிறது. சிவன் ஆலமரத்தில் குடியிருப்பதாக அகநானூறு கூறுகிறது (அகநானூறு-181 :16 -17 )
"
ஆலமர் செல்வன்" -  சிறுபாணாற்றுப்படை (97 )
"
ஆல்கெழு கடவுள்" - புறநானூறு (198 :9 )

                 
மனித இனத்தின் முதல் கடவுள் சிவனே என்பது இதிலிருந்து தெளிவு.  (உலகின் தொன்மையான நாகரிகம் சிந்து சமவெளிப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட சிவன் சின்னமும் இதனை உறுதிப்படுத்துகிறது.)
  
Trustworthiness:
Vendor reliability:
Privacy:
Child safety:

2 comments:

  1. //மனித இனத்தின் முதல் கடவுள் சிவனே என்பது இதிலிருந்து தெளிவு.//
    ஓம் நமச்சிவாய! ’ஒன்றவன்தானே’ என்கிறார் திருமூலர்!
    நன்று.

    ReplyDelete